இனி தினமும் நிறைய தடை சிக்கல் வரும், ஆனால் விஜய் - இயக்குனர் சமுத்திரக்கனி ஒபன் டாக்

By subhashini · 9/5/2026

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். சினிமாவை தாண்டி விஜய் அரசியலில் இறங்கி இருக்கிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து இவர் அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இவருடைய பேச்சு முழு அரசியல்வாதியாக இருக்கிறது என்று பலரும் பாராட்டிருந்தார்கள். இதை அடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்கள்.

அதற்குப்பின் விஜய் தன்னுடைய கட்சி சார்பில் 234 தொகுதிகளும் நிற்கப்போகும் வேட்பாளர்களையும் அறிவித்திருந்தார். தமிழ்நாட்டில் விஜய் இந்த தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். மேலும், விஜய் அவர்கள் ஒரு மாவட்டத்திற்கும் சென்று பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார். இதை அடுத்து தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவிற்கு 85 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்ததாக அறிவித்திருந்தார்கள்.

விஜய் அரசியல்:

பின் தேர்தலின் முடிவுகள் வெளியானது. 75 வருட திமுக, 50 வருட அதிமுக என எல்லா கட்சியையும் தவெக கட்சி கதி கலங்க வைத்தது. தமிழகத்தில் 108 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் தவெக கட்சி இருக்கிறது. இது மிகப்பெரிய வரலாற்று சாதனையாகவே பார்க்கப்படுகிறது. கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டில் ஒரு தனி மனிதன் தேர்தலில் வெற்றி பெறுவது மிகப்பெரிய விஷயம் என்று எல்லோருமே பாராட்டி வருகிறார்கள்.

விஜய் வெற்றி:

இதை அடுத்து பிரபலங்கள், நடிகர்கள், ரசிகர்கள், அதிகாரிகள் என பலருமே விஜய்க்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இதை அடுத்து பெரும்பான்மை ஆக 118 சீட்டுகள் இருந்தால் மட்டும்தான் முதலமைச்சராக முடியும் என்று ஆளுநர் கூறியிருந்தார். இதை அடுத்து விஜய் அவர்கள் வெற்றி பெற்ற மற்ற கட்சிகளிடம் கூட்டணிக்கு கேட்டிருந்தார். தற்போது பெரும்பான்மையாக 118 எம் எல் ஏக்கள் உயர்ந்துள்ளது. இதனால் நாளை விஜய் முதலமைச்சர் ஆக பதவி ஏற்க இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=tkwTWmb5zpk

சமுத்திரகனி பேட்டி:

இப்படி இருக்கும் நிலையில் இது தொடர்பாக நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி, பல தடைகளை தாண்டி தற்போது ஆட்சி அமைக்க இருக்கும் என்னுடைய அன்பு சகோதரர் தளபதி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த தடைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை சகோதரர். இதைத் தாண்டி பல தடைகள் சிக்கல்கள் தினமும் வரும். அதையெல்லாம் நீங்கள்
உடைத்து அற்புதமான ஆட்சியை தமிழகத்தில் கொடுத்து நல்ல நிலைக்கு தமிழகத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று நான் இறைவனை வேண்டி கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full