விஜய்யை விமர்சித்ததற்கு நான் குற்றமும், வருத்தமும் படவில்லை - நடிகர் சமுத்திரக்கனியின் போல்டான பதில்

By subhashini · 25/3/2026

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் முடிசூடா மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. இவருடைய படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்து இருந்தார்.

இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சிக்கு பெயர் சூட்டி, சின்னம், கொடி, பாடல் என அனைத்தையுமே அறிவித்திருந்தார். இவர் அரசியலுக்கு வருகிறார் என்று தெரிந்ததுமே மற்ற கட்சித் அரசியல்வாதிகளுக்கு கதி கலங்கியது. இருந்தாலும் விஜய் அதை கண்டுகொள்ளாமல் தன்னுடைய அரசியல் பயணத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட இருபதாக விஜய் அறிவித்து இருந்தார்.

விஜய்-திரிஷா சர்ச்சை:

இப்படி இருக்கும் சூழ்நிலையில் விஜய்யை விவாகரத்து செய்வதாக அவருடைய மனைவி சங்கீதா அளித்திருந்த புகார் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருந்தது. விஜயின் விவாகரத்திற்கு காரணம் பிரபல நடிகை என்று சங்கீதா கூறியிருந்தார். உடனே திரிஷா-விஜயை இணைத்து பேசி இருந்தார்கள். பின் திரிஷா-விஜய் இருவரும் சேர்ந்து பிரபலத்தின் திருமணத்திற்கு சென்றிருந்தார்கள். இதை அடுத்து பலருமே இதற்கு கண்டனம் தெரிவித்தும் விமர்சித்தும் இருந்தார்கள்.

சமுத்திரக்கனி சொன்னது:

அந்த வகையில் பிரபல நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி, இதெல்லாம் ஒரு விளையாட்டா? யாரை பழிவாங்க இதை செய்கிறார். ஒரு பிரச்சினை நடக்கும் போது நடிகையை கூட்டிக்கொண்டு வருகிறார். நான்கு சுவருக்குள் இதையெல்லாம் வைத்துக்கொள்ள வேண்டும். சொந்த கட்சிக்காரர்களே, இதற்கு மேல் முட்டுக் கொடுக்க முடியாது என்று புலம்புகிறார்கள் என்று பேசியிருந்தார். இப்படி இவர் பேசியிருந்தது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியிருந்தது.

https://www.youtube.com/watch?v=dFAsFdPsowQ

சமுத்திரக்கனி விளக்கம்:

இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் சமுத்திரக்கனி, எனக்கு மனதில் ஒன்று வைத்துக்கொண்டு வெளியில் ஒன்று பேச தெரியாது. மகிழ்ச்சியோ, வலியோ அதை அப்படியே வெளிப்படுத்தி விடுவேன். ஒரு அக்கறையும் அதனால் ஏற்பட்ட வலியும்தான் அப்படி பேசியதற்கு காரணம். அப்படி பேசியதற்காக நான் வருத்தப்படவில்லை. அதை குற்றமாகவும் நான் நினைக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full