சத்தம் இல்லாமல் நடந்து முடிந்த பிக் பாஸ் சம்யுக்தாவின் இரண்டாவது திருமணம் - குவியும் வாழ்த்துக்கள்
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சம்யுக்தா. இவர் படிக்கும்போதே மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வந்தார். பின் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் இவர் ராதிகா நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகியிருந்த சந்திரகுமாரி என்ற சீரியலில் நடித்திருந்தார். அதற்கு பிறகு தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதற்குப்பின் இவருக்கு பட வாய்ப்புகள் வந்தது.
அந்த வகையில் இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு என்ற படத்தில் நடித்து இருந்தார். அதன் பின் இவர் காபி வித் காதல், காரி, கொடுவா, மை டியர் பூதம், துக்ளக் தர்பார் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் சம்யுக்தா தன்னுடைய பெற்றோர்கள் விருப்பப்படி கார்த்திக் சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் ஒரு தொழில் அதிபர். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். சில வருடங்களுக்கு முன் இவர் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்து இருந்தார்.
சம்யுக்தா குறித்த தகவல்:
அதற்கு காரணம், கொரோனா காலகட்டத்தில் சம்யுக்தா கணவர் துபாயில் வேறொரு பெண் உடன் 4 வருடம் தொடர்பில் இருந்தார். அதனால் தான் இருவரும் பிரிந்து விட்டார்கள். சமீபத்தில் தான் இவர்கள் இருவருக்குமே பரஸ்பரமாக விவாகரத்து கிடைத்து. தற்போது தன்னுடைய மகனுடன் சம்யுக்தா தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார். பின் நடிகை சம்யுக்தாவிற்கு இரண்டாவது திருமணம் நடப்பதாக கூறப்பட்டது. அதாவது நடிகை சம்யுக்தா அவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான அனிருதா ஸ்ரீகாந்த்தை தான் திருமணம் செய்ய இருப்பதாக சோசியல் மீடியாவில் நிறைய செய்திகள் வந்தது.
அனிருதா ஸ்ரீகாந்த் பற்றிய தகவல்:
அனிருதா ஸ்ரீகாந்தின் முதல் மனைவி ஆர்த்தியின் தோழி தான் சம்யுக்தா என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு சமீபத்தில் தீபாவளி பண்டிகை போது கூட சம்யுக்தா, அனிருதா ஸ்ரீகாந்த் உடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து, எல்லா இணையத்திலேயே இருக்கிறது. என்ன இருக்கிறதோ அதுதான் என்று கூறி இருந்தார். இதன் மூலம் இவர்கள் இருவரும் திருமணம் செய்வது கொள்வது உறுதியாகி இருக்கிறது. மேலும், கிரிக்கெட் ஜாம்பவான் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தின் மகன் தான் அனிருதா.
சம்யுக்தா திருமணம்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சில சீசன்கள் இவர் விளையாடியிருக்கிறார். இப்போது கிரிக்கெட் வர்ணனையாளராக இருக்கிறார். இவரும் ஏற்கனவே திருமணம் ஆனவர் தான். கடந்த 2012 ஆம் ஆண்டு தான் இவருக்கு ஆர்த்தி வெங்கடேஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இவர்களுமே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இன்று சம்யுக்தா- அனிருதா ஸ்ரீகாந்தின் திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு இருக்கிறார்கள். தற்போது இவர்களுடைய திருமண புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.