என்னை அடித்து உதைத்தான். எனது தலையில் ரத்தம் வழிந்தது - நடிகை சனா கான் பரபரப்பு.

By Rajkumar · 14/3/2020

தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் 2008 ஆம் ஆண்டு வெளியான ‘சிலம்பாட்டம்’ படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சனா கான். சிலம்பாட்டம் படத்திற்கு பிறகு பரத் நடிப்பில் வெளியான ‘தம்பிக்கு எந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு' போன்று சில படங்களில் நடித்து உள்ளார். பின்னர் தமிழில் சரியாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு, கன்னடம் படங்களில் நடிக்க தொடங்கினார். அப்படியே பாலிவுட் பக்கம் சென்று செட்டிலாகி விட்டார் நடிகை சனா.

சமீபத்தில் கூட இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சனாகான். கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் அதிக வாய்ப்புக்கள் தேடி வராததால் சொந்தமாக ஒரு சிறு அழகு சாதன விற்பனை தொழிலை செய்து வருகிறார். நடிகை சனாகான் அவர்கள் நடன இயக்குநர் மெல்வின் லூயிஸை காதலித்து வந்தார். ஆனால், சமீபத்தில் தனது காதலருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் இதனால் அவருடன் இருந்து தான் பிரிந்துவிட்டதாகவும் கூறி இருந்தார் சனா கான்.

மேலும், அவருக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருக்கிறது. அதை நான் கண்டுபிடித்துவிட்டேன் அதனால் தான் நான் பிரிந்து விட்டேன் என்று கூறியிருந்த சனா கான் சமீபத்தில் கூட தனது முன்னாள் காதலர் குறித்து மீண்டும் ஒரு குற்றச்சாட்டை கூறி இருந்தார். அதில், அவன் ஒரு சிறிய பெண்ணை ஏமாற்றி விட்டு கர்ப்பமாக்கி விட்டான். மேலும், அந்த பெண்ணிடம் பணத்தையும் பெற்றிருக்கிறான். ஒரு ஆசிரியர் இப்படித்தான் தனது மாணவர்களிடம் நடந்து கொள்வாரா?

அவனின் பெற்றோர் தற்போது பெருமையாக இருப்பார்களா? இவர்கள் மிகவும் மோசமானவர்கள் அல்லாஹ் கண்டிப்பாக உங்களுக்கு ஒரு பாடத்தை கற்றுக் கொடுப்பார் அதை நான் பார்ப்பேன் என்று நினைக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார் சனாகான். சனா கானின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதில் அளித்த அவரின் முன்னாள் காதலர், சனாகான் தன்மீது தொடர்ந்து அவதூறு கூறி பிளாக்மெயில் செய்கிறார் என்று மெல்வின் குற்றம் சாட்டி இருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள சனா கான் என்று மீண்டும் ஒரு புதிய குண்டை தூக்கி போட்டுள்ளார். நான் பிளாக்மெயில் செய்யவில்லை. காதலை முறித்தபோது அவர் முன்னால் தைரியமாக நின்றேன். அப்போது என்னை சமாதானம் செய்து மனதை மாற்ற முயன்றார். நான் அவரது பேச்சை கேட்கவில்லை. அவர் என்னை அடித்து உதைத்து இருக்கிறார். அப்போது எனது தலையில் ரத்தம் வழிந்தது. முகத்திலும் அடித்து காயப்படுத்தினார். அந்த புகைப்பட ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full