ஹிஜாப் அணிந்ததற்கான காரணத்தை முதன் முதலாக மனம் திறந்து நடிகை சனா கான் பதிவிட்டுள்ள பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் 2008 ஆம் ஆண்டு வெளியான ‘சிலம்பாட்டம்’ படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சனா கான். முதல் படத்திலேயே இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சிலம்பாட்டம் படத்திற்கு பிறகு சனா நடிப்பில் வெளியான ‘தம்பிக்கு எந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு’ போன்று சில படங்களில் நடித்து இருந்தார்.

பின்னர் தமிழில் சரியாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு, கன்னடம் படங்களில் நடிக்க தொடங்கினார். அப்படியே பாலிவுட் பக்கம் சென்று செட்டிலாகி விட்டார் நடிகை சனா. சமீபத்தில் கூட இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சனா கான். கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் அதிக வாய்ப்புக்கள் தேடி வராததால் சொந்தமாக ஒரு சிறு சோப்பு நிறுவனம் ஒன்றும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

சனா கான் திருமணம்:

பின் நடிகை சனாகான் அவர்கள் நடன இயக்குநர் மெல்வின் லூயிஸை காதலிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், தனது காதலருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், இதனால் அவருடன் இருந்து தான் பிரிந்துவிட்டதாகவும் கூறி இருந்தார் சனா கான். பின் 2020 ஆம் ஆண்டு நடிகை சனா கானுக்கு குஜராத் மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமிய அறிஞரான முஃப்தி அனஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களும், காணொலிகளும் சமூக வலைதளத்தில் வைரலாகி இருந்தது.

சனா கான் பதிவிட்ட பதிவு:

சமீபகாலமாக சனாகான் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எதிலுமே பங்கு பெறுவதில்லை.
திருமணம் செய்து கொண்டு தன்னுடைய குடும்ப வாழ்வில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சனா கான் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவு செய்திருக்கிறார். அதில் அவர் தனது வாழ்வின் கடுமையான நாட்கள் குறித்தும், ஹிஜாப் அணிய காரணம் குறித்து பேசியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, கடந்த கால வாழ்க்கையில் பெயர், புகழ், பணம் எல்லாம் என்னிடம் இருந்தது.

Advertisement

வாழ்வின் கடுமையான நாட்கள்:

ஆனால், நிம்மதி என்னிடம் இல்லை. அந்த நாட்கள் மிகவும் கடுமையான ஒன்றாக இருந்தது. மிகுந்த மன உளைச்சலுடன் இருந்தேன். அப்போது 2019 ரமலான் நாளன்று எனக்கு ஒரு கனவு வந்தது. அதில் ஒரு கல்லறையை பார்த்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அந்த கல்லறையில் நான் இருப்பதை பார்த்தேன். அந்த கனவு இதுதான் என் முடிவு என்று இறைவன் எனக்கு உணர்த்தியது போல இருந்தது. இது எனக்கு கொஞ்சம் பதட்டத்தை ஏற்படுத்தி இருந்தது. அதன் பின் ஏராளமான இஸ்லாமிய உரைகளைக் கேட்க ஆரம்பித்தேன்.

Advertisement

ஹிஜாப் அணிய காரணம்:

குறிப்பாக அதில் இருந்த உங்களின் கடைசி நாள் ஹிஜாப் அணிந்த முதல் நாளாக இருக்க விரும்பவில்லை என்ற அழகிய வாசகம் ஒன்று என்னை ஆழமாக சிந்திக்க வைத்தது. மறுநாள் காலையில் நான் எழுந்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அது என் பிறந்தநாள், அன்று முதல் ஹிஜாப் அணிய ஆரம்பித்தேன். இனி இதை ஒருபோதும் அகற்ற மாட்டேன் என்று உறுதி செய்து கொண்டேன். இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

Advertisement