கர்ப்பமாக இருக்கும் சிம்பு பட நடிகையை தரதரவென இழுத்து சென்ற கணவர் - அவர் சொன்ன காரணம்.

By subhashini · 18/4/2023

சிம்பு பட நடிகையை அவருடைய கணவர் தர தரவென இழுத்து சென்றிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் 2008 ஆம் ஆண்டு வெளியான ‘சிலம்பாட்டம்’ படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சனா கான். முதல் படத்திலேயே இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சிலம்பாட்டம் படத்திற்கு பிறகு சனா கான் ‘தம்பிக்கு எந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு’ போன்று சில படங்களில் நடித்து இருந்தார்.

பின்னர் தமிழில் சரியாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு, கன்னடம் படங்களில் நடிக்க தொடங்கினார். அப்படியே பாலிவுட் பக்கம் சென்று செட்டிலாகி விட்டார் நடிகை சனா. அதன் பின் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சனா கான். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் இறுதி வரை சென்று இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார். மேலும், கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் அதிக வாய்ப்புக்கள் தேடி வராததால் சொந்தமாக ஒரு சிறு சோப்பு நிறுவனம் ஒன்றும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

சனா கான் குறித்த தகவல்:

இதனிடையே நடிகை சனாகான் அவர்கள் நடன இயக்குநர் மெல்வின் லூயிஸை காதலிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், தனது காதலருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், இதனால் அவருடன் இருந்து தான் பிரிந்துவிட்டதாகவும் கூறி இருந்தார் சனா கான். இதை அடுத்து 2020 ஆம் ஆண்டு நடிகை சனா கானுக்கு குஜராத் மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமிய அறிஞரான முஃப்தி அனஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani)

சனா கான் திருமணம்:

இது தொடர்பான புகைப்படங்களும், காணொலிகளும் சமூக வலைதளத்தில் வைரலாகி இருந்தது. சமீபகாலமாக சனாகான் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எதிலுமே பங்கு பெறுவதில்லை. திருமணம் செய்து கொண்டு தன்னுடைய குடும்ப வாழ்வில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சனா கானை அவருடைய கணவர் வலுக்கட்டாயமாக இழுத்து சென்றிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சனா கான் கணவர் செய்த வேலை:

அதாவது, சமீபத்தில் மும்பையில் நடந்த ஃப்தார் விருந்தில் தனது கணவர் முஃப்தி அனஸ் சயத்துடன் சனா கான் கலந்து கொண்டிருந்தார். இந்த விழாவில் சனா கானின் கணவர் அவருடைய கையை பிடித்து விறு விறுவென வேகமாக இழுத்து சென்றிருக்கிறார். இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தற்போது சனாக்கான் கர்ப்பமாக இருக்கிறார். இதனால் கர்ப்பமாக இருக்கும் பெண்ணை இப்படியா? இழுத்து செல்வது என்றெல்லாம் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Saiyad Sana Khan (@sanakhaan21)

சனா கான் கொடுத்த விளக்கம்:

இந்த நிலையில் இதற்கு விளக்கம் கொடுத்து சனாக்கான் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில், எனக்காக கவலைப்பட்டதற்கு நன்றி. எங்கள் கார் டிரைவரை எங்களால் அழைக்க முடியவில்லை. நான் நீண்ட நேரம் அப்பகுதியில் நின்றதால் எனக்கு வியர்த்துக் கொட்டியது. இதனால் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதனால் அவர் என்னை அப்பகுதியில் இருந்து விரைவாக அழைத்துச் செல்லும் நோக்கில் அப்படி செய்தார் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full