தர்ஷன் கைது ஆனது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது - பிக் பாஸ் சனம் ஷெட்டி வெளியிட்ட வீடியோ

By subhashini · 5/4/2025

பிக் பாஸ் தர்ஷன் விவகாரம் தொடர்பாக நடிகை சனம் ஷெட்டி வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் தர்ஷன். சோசியல் மீடியா முழுவதும் தர்ஷன் பஞ்சாயத்து தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, சென்னை முகப்பேர் பகுதியில் வசித்து வருகிறார் தர்ஷன். இவருடைய வீட்டிற்கு முன்பு நீதிபதியின் மகன் காரை நிறுத்தி இருந்ததால் கோபத்தில் தர்ஷன் கேள்வி கேட்டு இருந்தார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு கை கலப்பு ஆகி இருந்தது.

இதனால் நீதிபதியின் மகன், அவருடைய மனைவி, மாமியாரை தாக்கி இருப்பதாக கூறப்பட்டது. இதை அடுத்து நீதிபதியின் மகன் அவருடைய மனைவி மாமியார் ஆகியோரை தாக்கியதால் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் தர்ஷன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது தர்ஷனை ஜே ஜே நகர் போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தர்ஷன் சொன்னது, என் வீட்டின் முன் நீதிபதி மகன் கார் நிறுத்தி வைத்து இருந்தார். இதனால் நான் ரோட்டிலேயே 20 நிமிடங்களுக்கு மேல் நின்று இருந்தேன்.

பார்க்கிங் விவகாரம்:

வீட்டிற்கு என் உறவினர்கள் வந்திருக்கிறார்கள் என்று விசாரித்தேன். ஆனால், என் வீட்டுக்கு யாரும் வரவில்லை. அதற்குப் பின் வந்த அந்த காரின் உரிமையாளர், நீ பிக் பாஸ் போன பெரிய ஆளா? உன்னால் கொஞ்ச நேரம் வெயிட் பண்ண முடியாதா? என்று சொன்னார். பின் என் தம்பியின் மீது சூடான டீயை ஊற்றினான். இதைப் பற்றி கேட்டதற்கு நான் ஜட்ஜ் பையனடா, உன்னால் என்ன செய்ய முடியும் என்று கேட்டு என்னுடைய தம்பி மீது அமர்ந்து அவரை தாக்க முயற்சித்து இருக்கிறார். அதோடு நான் எதுவும் பேசவில்லை. ஆனால், அவருடைய மனைவி, மாமியார் எல்லோருமே எங்களை சேர்ந்து தாக்கி இருக்கிறார்கள்.

தர்ஷன் கைது:

இது இங்கிருக்கும் அனைவருக்குமே தெரியும். இவர்கள் இந்த பிரச்சனையை இதோடு விடாமல் என் அக்காவை அழைத்து அவரை ரொம்ப அசிங்கமாக பேசி இருக்கிறார்கள். பின் நீதிபதியின் பையன் போலீசில் எங்கள் மீது புகார் கொடுத்து இருக்கிறார். பதிலுக்கு நான் 100க்கு போன் செய்தேன். ஆனால், அவர்கள் சரியான ரெஸ்பான்ஸ் செய்யவில்லை என்று வேதனையுடன் அழுது இருந்தார். மேலும் , இந்த சண்டையில் ஜட்ஜ் பையனையும், மனைவி மாமியாரை எல்லாம் தர்ஷன் மற்றும் அவருடைய நண்பர் தாக்கி தாக்கியதாக சொல்லி போலீசில் புகார் அளித்துவிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள்.

https://www.youtube.com/watch?v=UuiGWZweWP4

சனம் ஷெட்டி வீடியோ:

இதற்கு பலருமே கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக பிக் பாஸ் பிரபலமும், நடிகை சனம் செட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், தர்ஷன் கைதான செய்தி கேட்டதுமே எனக்கு ஒரு நொடி ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அந்தளவுக்கு நான் கஷ்டத்தையும் வேதனையையும் அனுபவித்திருந்தேன். இருந்தாலும் நியாயம் என்பது ரொம்ப முக்கியம். யாருக்கு பிரச்சனை என்றாலும் குரல் கொடுக்க வேண்டும். தர்ஷன் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் நான் என்ன செய்திருப்பேன் என்று யோசித்து பார்த்தேன்.

View this post on Instagram

A post shared by Sanam Shetty (@sam.sanam.shetty)

தர்ஷனுக்கு ஆதரவு:

விசாரணை கூட நடத்தாமல் ஒரு தரப்பு நியாயத்தை மட்டும் கேட்டு கைது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அதுவும் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்து இருக்கிறார்கள். காரணம், விசாரணையை திங்கட்கிழமை தான் நடத்த முடியும். இப்படி இருக்கும் போது அதிரடியாக தர்ஷனை கைது செய்ததற்கு காரணம் என்ன? ஆஸ்பிட்டலில் இருந்து நீதிபதியின் மகன் பேட்டி கொடுத்தார். அவர் சொல்வதெல்லாம் உண்மை என்றால் சிசிடிவி காட்சியை வெளியிட்டு இருக்கலாமே? தர்ஷம் மீது எஃப் ஐ ஆர் போட்டு கைது செய்திருக்கும் போது சிசிடிவி காட்சிகளை வெளியிடாமல் இருப்பதற்கு காரணம் என்ன? தப்பு பண்ணாதவங்க தண்டனை அனுபவித்தால் அது மிகப்பெரிய குற்றம் என்று தர்ஷனுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full