உங்க சொந்த கருத்தை பேசுங்க, இதெல்லாம் தேவையில்லாத வேலை- ஜூலியை கடுமையாக விமர்சித்த சனம் ஷெட்டி
கடந்த சில தினங்களாகவே விஜய் பற்றி ஜூலி பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில்
சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மாஸ் நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது இவர் சினிமாவை தாண்டி அரசியலிலும் களமிறங்கி இருக்கிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியை ஆரம்பித்து மும்முரமாக செயல்பட்டு வருகிறார். அதோடு விஜய் அவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் சமீபத்தில் வேலூர் மாவட்டத்தில் தன்னுடைய கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து விஜய் அவர்கள் உரையாடி இருந்தார். அதில் விஜய் அவர்கள் ஜல்லிக்கட்டு காளை பற்றி ஒரு குட்டி கதை சொல்லியிருந்தார். இதற்கு பிக் பாஸ் ஜூலி, உங்கள் கட்சியில் பாதி பேர் மைனர்கள். ஜல்லிக்கட்டு காளைக்கு புல்லு கட்டு காட்ட போயிட்டு உயிரிழப்புகள் அதிகரிச்சா என்ன செய்வீங்க? என்று கேள்வி எழுப்பி வீடியோ ஒன்றை போட்டிருந்தார். இது மிகப்பெரிய அளவில் அதிர்வலை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் ரசிகர்கள் பலரும் ஜூலியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
ஜூலி சொன்னது:
அது மட்டும் இல்லாமல் பிரபலங்கள் பலரும் ஜூலியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசுகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக நடிகை ஜூலி வெளியிட்ட வீடியோவில், உங்களுடைய ரசிகர்கள் என்னை சமூக வலைத்தளங்களில் கடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்னை மிரட்டி கொண்டிருக்கிறார்கள். அதற்காக நான் பயந்து அந்த வீடியோவை டெலிட் செய்ய மாட்டேன். என்னுடைய கருத்துக்களில் இருந்தும் பின்வாங்க மாட்டேன். விஜய் அண்ணா உங்களுக்கு என்னை பழிவாங்க வேண்டும் என்றால் நான் வீட்டில் இருப்பேன். இல்லையென்றால் அலுவலகத்தில் இருப்பேன் என்றார்.
https://www.youtube.com/watch?v=ckUj7P5XeeI
சனம் செட்டி வீடியோ:
இந்நிலையில் சனம் செட்டி வெளியிட்ட வீடியோவில், யாரோ ஏதோ சொல்லிட்டாங்க என்று அதை அப்படியே ஃபாலோ பண்ணுனா இப்படித்தான் நடக்கும். பேசுங்க, ஆனால் உங்கள் சொந்த கருத்தை பேசுங்க. ஜூலி உங்களுக்கு தான் இது. உங்கள் மேலே இருக்கிற அக்கறையில் தான் சொல்கிறேன். பி யுவர் செல்ப். அப்படி என்னதான் சொல்லிட்டாங்க தளபதி? ஒரு குட்டி கதை சொன்னார். தமிழ்நாடு என்பது ஒரு ஜல்லிக்கட்டு காளை மாதிரி. அனுபவமே இல்லாமல் நாங்க வந்திருக்கிறோம். அனுபவம் இல்லைன்னு பார்க்காதீங்க நம்பி ஓட்டு போடுங்க.
https://www.youtube.com/watch?v=PsoeYIJkZb8
வெளுத்து வாங்கிய சனம்:
அப்படித்தானே சொல்லுவாங்க. முழு ஸ்பீச்சை பார்த்து தான் பேசுறீங்களா, இதில் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் பண்ண எதுவுமே இல்லையே. நீங்கள் சரி ரசிகர்கள் அவர் பேசியதை கேட்டு காளை மாடு பக்கத்தில் போய் விடக்கூடாது என்று நல்ல அக்கறையில் சொல்றீங்கன்னா சரி. ஆனால், நீங்க அவரை பர்சனலா அட்டாக் பண்றதுக்காக தான் இப்படி பேசுறீங்க. ஐம்பதிலிருந்து 500 ஆகிட கூடாதுன்னு சொல்றீங்க. அப்புறம் இன்னொரு வீடியோ போடுறீங்க. இதெல்லாம் தேவையில்லாத வேலை என்று கூறி இருக்கிறார்.