ஏன்டா சாபத்த வாங்குறீங்க, நல்லா இருப்பீங்களா - ஆவேசத்தில் பிக் பாஸ் சனம் ஷெட்டி சொன்னது

By subhashini · 2/4/2025

ஸ்ருதி நாராயணன் விவகாரம் தொடர்பாக நடிகை சனம் செட்டி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாக ஸ்ருதி நாராயணன் பஞ்சாயத்து தான் சென்று கொண்டு இருக்கிறது. சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினியின் தோழியாக வித்யா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் சுருதி நாராயணன். இந்த சீரியலில் இவர் ரோகினி செய்யும் எல்லா தில்லாலங்கடி வேலைக்கும் உறுதுணையாக நிற்கிறார்.

இவருடைய கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அது மட்டுமில்லாமல் சோசியல் மீடியாவில் இவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் நடிகை ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ என்ற பெயரில் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பார்த்து சிலர் இது மார்ப்பிங் வீடியோ என்று கூறுகிறார்கள். இன்னும் சிலர் படத்தின் வாய்ப்புக்காக தான் இவர் இப்படியெல்லாம் வீடியோ செய்து வெளியிடுகிறார் என்று கூறுகிறார்கள். ஆனால், இவருடைய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.

சீரியல் ஸ்ருதி நாராயணன் வீடியோ:

பின் இது தொடர்பாக சுருதி நாராயணன் போட்ட பதிவில், இரண்டு பெண்கள் ஒரே முக சாயலில் இருக்கிறார்கள். அதில் ஒருவர் ரியல், மற்றொருவர் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது. சரியானதை கண்டுபிடிங்கள் என்று கேட்டிருக்கிறார். அதன் பின் உண்மையான பெண் யார், ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்ட பெண் யார் என்பதையும் குறிப்பிட்டு இருக்கிறார். இதன் மூலம் தன்னைப் பற்றி பரவும் வீடியோ மார்ப்பிங் செய்யப்பட்டது என்று கூறியிருந்தார்.

ஸ்ருதி நாராயணன் பதிவு:

இருந்துமே விடாமல் சுருதி நாராயணனை சோசியல் மீடியாவில் மோசமாக விமர்சித்தும் திட்டியும் வருகிறார்கள். மேலும் இது தொடர்பாக ஸ்ருதி நாராயணன் பதிவில், நானும் பெண்தான். எனக்குமே உணர்ச்சிகள் இருக்கிறது. எனக்கு நெருக்கமானவர்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கிறது. அதை நீங்கள் ரொம்ப மோசமாக விமர்சித்து போடுகிறீர்கள். இப்படி காட்டுத்தீயாய் போல பரப்பாதீர்கள். வீடியோ பார்க்க வேண்டும் என்றால் உங்களுடைய அம்மா, சகோதரி அல்லது காதலி வீடியோவை பாருங்கள். ஏனென்றால் அவர்களும் பெண்தான்.

ஸ்ருதி நாராயணன் விளக்கம்:

அவர்களுக்குமே என்னை போன்ற உடல் இருக்கிறது. கமெண்டில் என்னைத்தான் எல்லோருமே குறை சொல்கிறார்கள். அந்த வீடியோவை லிங்க் செய்தவரை எந்த கேள்வியுமே கேட்கவில்லையே ஏன்? என்று ஆக்ரோஷமாக கூறி இருந்தார். இதற்கு பிரபலங்கள் சுருதி நாராயணனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் பிக் பாஸ் சனம் ஷெட்டி, ஸ்ருதி நாராயணன் வீடியோவை சமீபத்தில் பார்த்தேன். அந்த வீடியோவை நீங்கள் வைத்துள்ளீர்கள் என்றால் தயவு செய்து அதை டெலிட் செய்து விடுங்கள். அந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கு நிச்சயமாக காமம் தோன்றாது.

https://www.youtube.com/watch?v=qsMAlbn1IA4


சனம் ஷெட்டி பேட்டி:

அந்த பெண்ணின் மீது பரிதாபங்கள் தான் வரும். இது ஒரு வியாபாரம். படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்க வேண்டும் என்பார்கள். இப்போ கொஞ்சம் வித்தியாசமாக வீடியோ காலில் என்ன சொல்கிறோமோ அதை செய்ய வேண்டும் என்கிறார்கள். ஒரு புறம்போக்கு, பொறுக்கி, ஒரு தயாரிப்பாளர் உடைய மேனேஜர் ஒருவர்தான் அந்த பெண்ணை அவருக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்ய வைத்திருக்கிறான். அதை பார்க்கும்போது மனதில் ஒரு கேள்விதான் வருகிறது. ஆடிஷன் என்ற பெயரில் நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் சொல்வீர்களா? இந்த வழியில் பணம் ஈட்டி எத்தனை பெண்களுடைய சாபத்தை வாங்கப் போகிறீர்கள்? நீங்கள் நன்றாக இருப்பீர்களா? தயவு செய்து அந்த படத்தை குப்பையில் போடுங்கள் என்று ஆவேசமாக பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full