மார்க்கெட்டில் இல்லாத நடிகைன்னா அலைய வைப்பீங்களா? ஜனநாயகன் படக்குழு மீது சனம் ஷெட்டி ஆவேசம்
ஜனநாயகன் படம் தொடர்பாக சனம் ஷெட்டி வைத்திருக்கும் குற்றச்சாட்டு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் மத்தியில் தந்திருக்கின்றது. அந்த வகையில் கடைசியாக விஜயின் நடிப்பில் வெளியாகியிருந்த ‘கோட்’ படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருந்தது.
இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், கௌதமேனன், பிரியாமணி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள்.
தெலுங்கில் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான KVN தான் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. மேலும், இந்த படம் விஜய்யின் கடைசி படம் என்பது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
விஜய் ஜனநாயகன் படம்:
இது தான் இவரின் கடைசி படம். இது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் விஜய் அரசியலுக்கு வருவது சந்தோசத்தை கொடுத்து இருக்கிறது. இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து விஜய் அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பின் இவர் தன் கட்சியின் கொடி, பாடல், உறுதிமொழி, கொள்கை எல்லாம் அறிவித்து இருந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் விஜய் தன்னுடைய முதல் மாநாட்டை பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் நடத்தி இருந்தார்.
விஜய் அரசியல்:
இதை பார்த்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டி இருந்தார்கள்.
அதோடு வருகிற 2026 ஆம் ஆண்டில் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் விஜய் அறிவித்து இருந்தார். மேலும், விஜய் அவர்கள் தன்னுடைய கட்சியின் பூத் கமிட்டி உறுப்பினர்களை சந்தித்து அவர்களுடன் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் கோவை போனார். தற்போது மதுரைக்கு விஜய் சென்றிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ஜனநாயகன் படத்தினுடைய இறுதி கட்ட சூட்டிங் நடப்பதால் விஜய் பிஸியாக அதிலும் பங்கேற்று வருகிறார்.
சனம் செட்டி வீடியோ:
இப்படி இருக்கும் நிலையில் ஜனநாயகன் படம் தொடர்பாக நடிகை சனம் செட்டி வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, நான் விஜய்யினுடைய ரசிகை. தளபதி உடன் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப ஆசை. இது விஜய்னுடைய கடைசி படம் என்பதால் எப்படியாவது அவருடன் நடித்து விட வேண்டும் என்று ஆறு மாதமாக ரொம்ப முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அப்படி தான் ஜனநாயகன் படத்தினுடைய ஒரு உதவி இயக்குனரின் போன் நம்பர் கிடைத்தது. அவர் மூலம் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டேன். அவருமே இப்போ தருகிறேன், அப்போ தருகிறேன், கன்ஃபார்ம் ஆகிவிட்டது என்று இழுத்து அடித்துக் கொண்டே வந்தார்.
விஜய் பற்றி சொன்னது:
ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லை என்று சொல்லிவிட்டார். அவர் என்னிடம் பாலியல் ரீதியாக எல்லாம் தொல்லை தரவில்லை. ஆனால், என்னை அலைய வைத்தது தான் கஷ்டமாக இருக்கிறது. மார்க்கெட்டில் உள்ள நடிகைகள் என்றால் மீண்டும் மீண்டும் வாய்ப்பு தருகிறார்கள். நானும் நடிகை தான். மூன்று நான்கு படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறேன். நிறைய படங்களில் துணை படங்களில் நடித்து வருகிறேன். மார்க்கெட் இல்லை என்றால் இப்படி அலை வைப்பீர்களா? இது கண்டிப்பாக தளபதி விஜய்க்கு தெரிய வாய்ப்பில்லை. இது அவருக்கு தெரியணும் என்று தான் இந்த வீடியோவை பதிவிட்டு இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.