சின்ன பையன கல்யாணம் பண்ணிட்டேனா? நடிச்சி ஏமாத்திட்டார், ஆனா அந்த ஒரு வருடம் - மனம் திறந்த நடிகை சங்கீதா

By subhashini · 27/8/2024

தன்னுடைய கணவர் குறித்து முதன் முதலாக மனம் திறந்து நடிகை சங்கீதா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் சங்கீதா. இவர் மாடலிங் மூலம் தான் மீடியாக்கள் நுழைந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல விளம்பர படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு தான் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது. இவர் முதன் முதலாக 1998 ஆம் ஆண்டு நடிகர் நெப்போலியன் நடித்த பகவத்சிங் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்பாகவே இவர் மலையாள படத்தில் நடித்து இருந்தார்.

அதற்குப் பின் இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையை தொடங்கியவுடன் இவர் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் நடிகை மட்டுமில்லாமல் டான்ஸரும் ஆவார்.இவர் முறையாக பரதநாட்டிய கலையை பயின்றவர். மேலும், இவர் சினிமாவை தாண்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். இவர் பெரும்பாலும் நடன நிகழ்ச்சிகளில் தான் பங்கேற்றிருக்கிறார்.

சங்கீதா அளித்த பேட்டி:

அதுமட்டுமில்லாமல் படங்களிலும் இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையே இவர் பாடகர் கிரிஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான மகளும் இருக்கிறார். திருமணத்திற்குப் பிறகும் நடிகை சங்கீதா படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை சங்கீதா, ஒரு விருது விழா நிகழ்ச்சியில் தான் நான் கிரிஷை முதன் முதலாக பார்த்தேன். அப்போது அவருக்கு சிறந்த பாடகருக்கான விருதை நான் தான் கொடுத்தேன்.

காதல் - திருமணம்:

நான் க்ரிஷ் என்று அவருடைய பெயரை சொன்னவுடன் ரொம்ப அழகாக நடந்து வந்தார். அன்றே நாங்கள் இருவரும் சந்தித்து பேசி ஒன்றாக சாப்பிட்டோம். அப்போது அவர் என்னிடம் நல்லவர் போல நடித்து விட்டார். நானும் அவர் சொன்னதை நம்பி விட்டேன். நான் கொஞ்சம் உஷாராக இருந்திருக்க வேண்டும். அதோடு அந்த நேரத்தில் தான் என்னுடைய வீட்டிலும் எனக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே நான் கிரிஷை போல் எனக்கு ஒரு பையனை பாருங்கள் என்று சொன்னேன். அதற்கு என்னுடைய அம்மா, அவன் ரொம்ப சின்ன பையனாக இருக்கிறான் என்று சொன்னார்.

கிரிஷ் குறித்து சொன்னது:

அதோடு கிரிஷை பார்த்தவுடன் எனக்கும் அப்படித்தான் இருந்தது. அவரை நான் சந்தித்தபோது கேட்ட முதல் கேள்வியே, உங்களுடைய வயது என்ன? என்று தான் கேட்டேன். ஆனால், உண்மையில் அவர் என்னை விட இரண்டு வயது பெரியவர். கிரிஷ்யிடம் நான் தான் என்னுடைய காதலை சொன்னேன். அதை தொடர்ந்து நாங்கள் டேட் செய்து கொண்டிருந்தோம். எங்களுக்குள் புரிதல் நன்றாக இருந்ததால் தான் நாங்கள் அடுத்த கட்ட முடிவை எடுத்தோம். எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து எட்டாவது மாதத்தில் நாங்கள் கல்யாணம் செய்து கொண்டோம்.

திருமண வாழ்க்கை குறித்து சொன்னது:

அப்போது வரைக்கும் நாங்கள் இருவரும் நன்றாகத்தான் இருந்தோம். கல்யாணமான முதல் வருடத்திலேயே எங்களுக்குள் பெரிய சண்டை வந்தது. காரணம், அவருக்கு சினிமா துறை குறித்து பெரிதாக எதுவும் தெரியாது. அங்கு நடப்பது எல்லாம் அவருக்கு விசித்திரமாக இருந்தது. அதனால் நாங்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டே தான் இருந்தோம். உண்மையிலேயே அந்த ஒரு வருடத்தில் நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். கிட்டத்தட்ட வெளி உலகத்தையே நான் மறந்து எங்களுக்குள் உள்ள பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்பதிலே தான் நான் மூழ்கி இருந்தேன். ஒரு கட்டத்தில் எனக்கு நீ, உனக்கு நான் என்று நாங்கள் வாழ ஆரம்பித்தோம். அதன் பின்னர் எல்லாமே நல்லபடியாக இருந்தது. உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் அவர்தான் என்னுடைய முதல் குழந்தை என்று கூறி இருந்தார்.

behindtalkies AMP · Quick view
View full