விவாகரத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா

By Rajkumar · 11/10/2024

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா விஜய் தங்கள் குறித்து எழும் விவாகரத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள். கோலிவுடில் சிறந்த நட்சத்திர சம்பாதிக்களாக திகழ்ந்து வருகிறார்கள் நடிகர் விஜய் -சங்கீதா. இவர்களுக்கு திருமணம் ஆகி 25 ஆண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். சினிமா துறையில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜயின் தீவிர ரசிகைதான் சங்கீதா. விஜயன் தீவிர ரசிகையான சங்கீதா, விஜயை சந்திப்பதற்காக சென்னைக்கு வந்து விஜய் பெற்றோர்களையும் சந்தித்திருக்கிறார்.

சங்கீதாவை விஜய் பெற்றோர்களுக்கு பிடித்துப் போக சங்கீதாவிடம் விஜயை திருமணம் செய்து கொள்ள சம்மதம் கேட்டிருக்கிறார்கள். இதற்கு சங்கீதாவும் சம்மதித்து இருக்கிறார். ஆனால், ஆரம்பத்தில் இந்த திருமணத்திற்கு யோசித்து இருக்கும் விஜய் பின்னர் பெற்றோர்களின் ஆசைக்காக சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 25 ஆண்டுகளாக சங்கீதாவுடன் வாழ்ந்து வந்த விஜய் சமீப காலமாக சங்கீதாவை பிரிந்து விட்டதாக செய்திகள் வைரல் ஆகி வருகிறது.

விஜய்- சங்கீதா விவாகரத்து:

வழக்கமாக சங்கீதா எப்போதும் விஜய் படத்தின் பிரமோஷன், இசை வெளியீட்டு விழா என்று எதுவாக இருந்தாலும் வந்து விடுவார். ஆனால், சில ஆண்டுகளாக சங்கீதா விஜய் படத்தின் எந்த விழாவிற்கும் கலந்து கொள்வதில்லை. குறிப்பாக, நடிகர் விஜய் சமீபத்தில் தனது 'தமிழக வெற்றி கழகம்' என்னும் கட்சியை அறிவித்து அதற்கான கொடியேற்றும் விழாவையும் நடத்தி இருந்தார். அந்த விழாவில் கூட விஜயின் மனைவி சங்கீதா பங்கேற்கவில்லை. இதன் காரணமாகவே இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்று சமீப காலமாக சில சர்ச்சைகள் எழுந்து கொண்டிருக்கிறது.

முரசொலி செல்வம் மறைவு:

இந்நிலையில், நடிகர் விஜயின் மனைவி சங்கீதா முரசொலி செல்வம் அவர்களின் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கும் விஷயம்தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வமான பத்திரிக்கையாக செயல்பட்டு வரும் முரசொலியின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றி வந்தவர் முரசொலி செல்வம். 84 வயது நிரம்பிய முரசொலி செல்வம், கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி காலை மாரடைப்பால் காலமானார். அவருடைய மறைவுக்கு பல அரசியல் தலைவர்களும் சினிமா துறையினரும் நேரில் சென்று தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து இருந்தார்கள்.

முரசொலி செல்வம் குறித்து:

மூத்த பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும் செயல்பட்டு வந்தவர் முரசொலி செல்வம். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் மருமகன் என்பது பிற்படுத்தக்கது. அதாவது மறைந்த கலைஞர் கருணாநிதி உடன் பிறந்த சகோதரி சுந்தரம்மாளின் மகன்தான் முரசொலி செல்வம். கடந்த சில நாட்களாகவே உடல்நல குறைவால் அவர் அவதிப்பட்டு வந்த நிலையில், பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி மாரடைப்பு காரணமாக அவர் காலமானார்.

https://www.youtube.com/watch?v=eMyI87zAeG8

அஞ்சலி செலுத்திய சங்கீதா:

இந்த சூழலில் தான் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான தளபதி விஜயின் மனைவி சங்கீதா, நேரடியாக கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்று மறைந்த முரசொலி செல்வத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறார். கண்டிப்பாக தளபதி விஜய் சொல்லி அனுப்பி தான் சங்கீதா இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பார் என்று சில தகவல்கள் வெளியாகி வருகின்றது. மேலும், விஜய் மற்றும் சங்கீதா பிரிந்து வாழ்கின்றனர் என்ற வதந்திக்கு தற்போது இந்த ஜோடி பதிலடி கொடுத்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full