என் சேலையை பிடித்து இழுத்ததும் விஜய்யை பளார்னு அறைந்துவிட்டேன் - சங்கவி சொன்ன flashback

By subhashini · 13/10/2023

விஜய்யை பளார் என்று அறைந்ததற்கு அவர் இதை தான் செய்தார் என்று நடிகை சங்கவி அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளாக திகழ்ந்து வந்த நடிகைகள் தற்போது செகண்ட் இன்னிங்ஸ்சில் வலம் வந்து கொண்டு இருக்கின்றார்கள். ஆனால், ஒரு சில நடிகைகள் குடும்பம் குழந்தை என சென்று விடுகிறார்கள். பின் என்ன ஆனார்கள் என்பதே தெரியவில்லை.

அந்த வகையில் நடிகை சங்கவியும் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். இவர் 1977ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் மைசூரில் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் காவியா ரமேஷ். இவருடைய பாட்டி ஒரு கன்னட நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இவர் தந்தை மருத்துவர் ஆவார். பின் சங்கவி தன்னுடய சிறு வயதிலேயே அஜித்தின் அமராவதி படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

சங்கவி திரைப்பயணம்:

இந்த படமே இவருக்கு அறிமுக படமாக இருந்தது. அதன் பின்னர் இவருடைய நடிப்பு திறமையால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்தார். இவர் 95 படங்களுக்கு மேல் நடித்தார். அதுமட்டும் இல்லாமல் விஜய், அஜித், ரஜினி, விஜயகாந்த், கமல், சரத்குமார், பிரபு, சத்யராஜ் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் சங்கவி நடித்து இருக்கிறார். சொல்லப்போனால், 90ஸ் சினிமா உலகில் சங்கவி ஒரு ரவுண்ட் வந்தார்.

சங்கவி நடித்த சீரியல்கள்:

அதுமட்டும் இல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் சங்கவி நடித்து இருந்தார். இவர் கோகுலத்தில் சீதை, சாவித்ரி, காலபைரவன் ஆகிய சீரியல்களிலும் நடித்து இருந்தார். பின் சின்னத்திரை நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கி இருக்கிறார். இப்படி திருமணம் செய்யாமல் 22 வருடங்கள் சினிமாவில் மட்டுமே காலத்தை கழித்தார் சங்கவி. பின் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது 39 வயதில் ஒரு ஐ.டி கம்பெனி ஒனர் வெங்கடேஷ் என்பவரை சங்கவி திருமணம் செய்து கொண்டார்.

சங்கவி குடும்பம்:

அதன் பின் தனது 42 வயதில் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார் சங்கவி. இவர் திருமணத்திற்கு முன் கடைசியாக 2010ல் இந்திராணி என்ற தெலுங்கு படத்தில் நடித்து இருந்தார். திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு சங்கவி விலகி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சங்கவி சமுத்திரகனியுடன் இணைந்து கொளஞ்சி என்ற படத்தில் நடித்து இருந்தார். தற்போது சங்கவி முழுக்க முழுக்க கணவர், குழந்தை என்று செட்டில் ஆகிவிட்டார். இந்த நிலையில் சமீபத்தில் சங்கவி பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்தின் ஷூட்டிங்கில் நடந்த சுவாரசியமான சம்பவம் குறித்து கூறியிருந்தது, கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்தில் ஒரு தேதி பார்த்தால் என்ற பாடல் சீன் வரும்.

விஜய் குறித்து சொன்னது:

அப்போது அந்த பாடலில் நெருப்பு முகத்திற்கு குறுக்கே போகும் போது விஜய் என்னுடைய சேலையை இழுப்பார். பின் நான் அவரை அறைய வேண்டும். இந்த காட்சிக்கு பல டேக்குகள் எடுத்தார்கள். கடைசியில் என்னுடைய தாவணியில் சிறிது மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்து விட்டார்கள். அப்போது நான் பயந்து போய்விட்டேன். விஜய் தாவணியை இழுப்பதற்கு முன்பே நான் அவரை பளார் என்று அறைந்து விட்டேன். அதற்கு விஜய், அடித்தால் காதில் சத்தம் வரும் என்று கேள்விப்பட்டேன். ஆனால் இப்போது தான் அனுபவித்தேன் என்று சொன்னதாக சங்கவி கூறியிருந்தார்.

behindtalkies AMP · Quick view
View full