கல்யாணம் பண்ணல, 13 வயசுல வேலைக்கு அனுப்புனாங்க.! அம்மா மீதே குற்றம் சாட்டும் சங்கீதா.!
தமிழ் சினிமாவில் எண்ணற்ற பிரபலங்கள் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார், அந்த வகையில் கிரிஷ் மற்றும் சங்கீதா தம்பதிகளும் ஒருவர். நடிகை சங்கீதா 1998 ஆம் ஆண்டு நடிகர் நெப்போலியன் நடித்த பகவத்சிங் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்பாகவே ஒரு சில மலையாள படத்தில் நடித்து வந்தார்.
https://twitter.com/sangithakrish/status/1116619244043522049
நடிகை சங்கீதா எண்ணற்ற படங்களில் நடித்து வந்தார். பாலா இயக்கிய 'பிதாமகன்' படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இந்த நிலையில் `வயதான என்னை வெளியேற்றிவிட்டு நான் வசித்துவரும் வீட்டை அபகரிக்க முயல்கிறார் என் மகள்’ என நடிகைசங்கீதா மீது அவரின் தாய் பானுமதி தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார்அளித்திருந்தார்.
இதையும் படியுங்க : பைக்கில் ஒன்றாக ஊர் சுற்றும் மஹத்- யாஷிகா.! திரும்பவும் ஆரம்பிச்சிட்டாங்களா.!
இதுகுறித்து சங்கீதாவிடம் விசாரித்த போது சினிமா தொடர்பான விஷயம்னா பேசலாம். இது என் தனிப்பட்ட விஷயம். இதைப்பற்றி நான் எதுவும் பேச விரும்பலை என்று பதில் அளித்திருந்தார் சங்கீதா. இந்த நிலையில் முதன் முறையாக இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார் சங்கீதா.
அதில்,13 வயதில் தன்னை வேலைக்கு அனுப்பிய தாக்கும் படிப்பை நிறுத்திவிட்டு சொந்த நலனுக்காக தன்னிடம் காளி செக்கில் கையெழுத்து வாங்கியதாகவும், குடி மற்றும் போதைக்கு அடிமையான மகனுக்காக தன்னை எதிர்த்ததாகவும், தனக்கு திருமணம் செய்து வைக்காததால் தான் தானே போராடி திருமணம் செய்து கொண்டதாகவும், ஆனால் கணவருடன் வாழவிடாமல் நிம்மதியை கெடுத்து வருவதாகவும் இவை அனைத்திற்கும் நன்றி! என தனது அம்மா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அதில் குறிப்பிட்டுள்ளார் நடிகை சங்கீதா.