விரைவில் தன் தங்கை திருமணம், 8 மாத கர்ப்பம். இப்படி ஒரு நிலையில் மொட்டை அடித்துகொண்ட நிக்கியின் அக்கா. அவர் சொன்ன காரணம்.

By Rajkumar · 6/4/2022

கடந்த 2020 ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த போதைப்பொருள் விவகாரத்தில் பிரபல கன்னட நடிகையும் பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியுமான நடிகை சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டு இருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. போதை பொருட்களை கன்னட சினிமாவில் உள்ள நடிகர் நடிகைகள் கூட பயன்படுத்தியதாகவும் கன்னட பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். மேலும் போதை பொருள் பயன்படுத்தும் 15 நடிகர் நடிகைகளில் பெயரையும் அவர் போலீசாரிடம் கொடுத்தார்.

இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தீவிரபடுத்தினர்.பல்வேறு கன்னட நடிகர்கள் மற்றும் நடிகைகள் இந்த போதை பொருள் விவகாரத்தில் தொடர்ப்பு இருப்பதாக தெரியவந்தது. மேலும், பல்வேறு நடிகர் நடிகைகளிடம் சோதனை நடைபெற்றது. இந்த விவகாரத்தில் தமிழில் நிமிர்ந்த நில் படத்தில் நடித்த பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டார்.

போதை பொருள் வழக்கில் கைது :

அவரிடம் நடத்திய விசாரணையில் கன்னட திரை உலகில் நடக்கும் பார்ட்டிகளுக்கு போதை பொருள் சப்லை செய்யப்படுவதாக தெரியவந்தது. இப்படி ஒரு நிலையில் பிரபல நடிகை நிக்கி கல்ராணி தங்கை சஞ்சனா கல்ராணியும் இந்த போதை பொருள் விவாகரத்தில் சம்மந்தபட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதை தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டார். சஞ்சனா மற்றும் ராகினி இருவரும் கைது செய்யப்படடு நான்கு மாதம் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சிறைவாசத்திற்கு பிறகு அவர்கள் ஜாமினில் வெளியே வந்தனர்.

8 மாத கர்ப்பம் :

இப்படி ஒரு நிலையில்  இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தினார்களா என்பதை கண்டறிய, அவர்களது தலைமுடி மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. நடிகைகளின் தலைமுடி மாதிரியை ஆய்வு செய்த‌தில் அவர்கள் இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியானது. இந்த நிலையில் நடிகை ஜாமீனில் வெளிவந்த சஞ்சனா கல்ராணி அஜீஸ் பாஷா என்ற மருத்துவரைத் திருமணம் செய்துகொண்டு தற்போது 8 மாதம் கர்ப்பமாக இருந்து வருகிறார்.

மொட்டை தலையுடன் வெளியிட்ட புகைப்படம் :

இந்நிலையில் தான் சஞ்சனா கல்ராணி தனது தலைமுடியை எடுத்துவிட்டு மொட்டைத் தலையுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு உள்ளார். இவரது புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் கடும் வருத்தத்தை வெளியிட்டு வருகின்றனர். கர்ப்பமாக இருக்கும் வேளையில் இப்படி எல்லாம் செய்யலாமா என்று அட்வைஸ் செய்து வருகின்றனர். மேலும் தனது தோற்றம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சஞ்சா கல்ராணி, நான் பார்ப்பவரின் கண்களுக்கு அழகாகத் தெரிகிறேன்.

மொட்டை அடித்து கொண்ட காரணம் :

அதனால் நான் என் தலைமுடியை முழுவதுமாக தியாகம் செய்துவிட்டேன். பல சிரமங்களைக் கடந்து என் வாழ்க்கை மீண்டும் அழகாக இருக்கிறது. எனது வாழ்க்கையின் இந்தக் கட்டத்திற்கு என்னால் போதுமான அளவு கடவுளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். என் குழந்தையை வரவேற்க தயாராகி விட்டேன். சமீபத்தில் தான் நிக்கி கல்ராணிக்கும் ஆதிக்கும் திருமண நிச்சயதார்தம் நடைபெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full