யோகி பாபு வீட்டிற்கே சென்று அவரின் மகனுடன் வீடியோ வெளியிட்ட ரேணிகுண்டா பட நடிகை - யோகி பாபு கூட இதுவரை வீடியோ போடலையே

By Rajkumar · 23/7/2022

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தற்போது பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு.

இறுதியாக இவர் ஹீரோவாக நடித்த 'மண்டேலா' படம் பல விருதுகளை குவித்ததோட இந்த ஆண்டின் டாப் 10 படங்களில் ஒன்றாக வந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் 20 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கைவசம் வைத்து இருக்கிறாராம் யோகி பாபு.நடிகர் யோகி பாபுவிற்கு திருமணம் எப்போ?எப்போ? என்று பல கேள்விகள் சோசியல் மீடியாவில் வந்து இருந்தது. இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு ஒரு வழியாக நடிகர் யோகி பாபு திருமணம் செய்து கொண்டார்.

யோகி பாபு திருமணம் :

யோகி பாபு அவர்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்து முடிந்தது. இவர் வேலூரை சேர்ந்த மஞ்சு பார்கவி என்கிற பெண்ணை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் திருமணம் செய்து கொண்டார்.யோகி பாபு அவர்களுடைய குலதெய்வ கோவிலில் மிகவும் சிம்பிளாக தன்னுடைய திருமணத்தை செய்து கொண்டார். இதில் பிரபலங்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.

கொரோனாவால் கேன்சலான ரிஷப்ஷன் :

இருப்பினும் ரிஷப்ஷன் வைத்து அனைவரயும் அழைத்து தன் திருமணத்தை கொண்டாட திட்டமிட்டு இருந்தார் யோகி பாபு. இப்படி ஒரு நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக இவரது திருமண வரவேற்பு நடைபெறாமேலே போனது. இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யோகி பாபுவின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் தான் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே இரு மாநில எல்லையில் அமைந்துள்ள ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்தார் யோகி பாபு.

https://twitter.com/ParthibanAPN/status/1550501720719241217

யோகி பாபு மகன் 'விசாகன்' :

அதே போல கடந்த ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு தனது மகனுக்கு பெயர் சூட்டும் விழாவை நடாத்தி இருந்தார் யோகி பாபு. மேலும், தனது மகனுக்கு 'விசாகன்' என்று பெயர் வைத்துள்ளார். விசாகன் என்பது தமிழ் கடவுள் முருகனின் பெயர்களுள் ஒன்று. மேலும், நடிகர் யோகி பாபு , முருக கடுவுளின் தீவிர பக்தன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரது மகனுக்கு முருக பெருமான் பெயரை வைத்தார்.

நடிகை வெளியிட்ட வீடியோ :

இப்படி ஒரு நிலையில் யோகி பாபுவின் மகனுடன் நடிகை வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. தமிழில் ரேணிகுண்டா படத்தின் மூலம் பிரபலமான சஞ்சனா தான் யோகி பாபுவின் பிறந்தநாளுக்கு அவரின் வீட்டுக்கு சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். மேலும் யோகி பாபுவின் மகனுடன் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் சஞ்சனா. இதுவரை யோகி பாபு கூட தனது மகனுடன் வீடியோ வெளியிடாத நிலையில் சஞ்சனா வெளியிட்டு இருக்கும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full