லோகேஷ் கனகராஜ் மீது எனக்கு நிறைய கோபம், என்னை ஏமாத்திட்டார் - நடிகர் சஞ்சய் தத் ஆதங்கம்

By subhashini · 13/7/2025

லோகேஷ் கனகராஜ் பற்றி பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது மட்டும் கோடிக்கணக்கில் சம்பாதித்து சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கிறார்கள். அதிரடி ஆக்சன் பாணியில் வெளிவந்த லியோ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து மட்டும் இல்லாமல் திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். மேலும், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் சஞ்சய் தத். இவர் பாலிவுட் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

சஞ்சய் தத் குறித்த தகவல்:

இவர் நடிகர் மற்றும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் என்பது காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் இந்தியில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது யாஷ் நடிப்பில் கன்னட மொழியில் வெளியாகி இருந்த கேஜிஎஃப் படத்தின் மூலம் தான். அந்த படத்தில் சஞ்சய் தத் அவர்கள் அதிரா கதாபாத்திரத்தில் மிரட்டி இருப்பார். இந்த படத்தின் மூலம் இவர் இந்தியா முழுவதுமே பிரபலமானார்.

சஞ்சய் தத் படங்கள்:

அதற்கு பிறகு தான் இவருக்கு இன்னும் பட வாய்ப்புகள் வந்தது. அதனை அடுத்து இவர் விஜயின் நடிப்பில் லியோ படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும் இவருக்கு பெரியளவு ஸ்கோப் கிடைக்கவில்லை. இதை எடுத்து தற்போது இவர் இயக்குனர் பிரேம் இயக்கத்தில் துருவா சர்ஜா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கே.டி. தி டெவில்' படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் ஷில்பா ஷெட்டி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். விஜயின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜனநாயகன் படத்தை தயாரித்த கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தான் இந்த படத்தையுமே தயாரித்து இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=lwJGBlOD0IQ

சஞ்சய் தத் பேசியது:

இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி எனும் பல மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இப்படத்துடைய டீசர் வெளியீட்டு விழா சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். அப்போது இந்த விழாவில் பேசிய சஞ்சய் தத், எனக்கும் கமல் சார் மீதும் ரஜினி சார் மீதும் நிறைய மரியாதை இருக்கிறது. அவர்கள் என்னுடைய சீனியர். அவர்களிடமிருந்து நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்.

லோகேஷ் பற்றி சொன்னது:

நான் ரஜினி சார் உடன் இந்தி படங்களிலிருந்து பணியாற்றி இருக்கிறேன். நான் பார்த்த மனிதர்களில் ரொம்பவே பணிவானவர் ரஜினி சார். நான் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் வேலை செய்து இருக்கிறேன். நான் லோகேஷ் கனகராஜ் மீது நிறைய கோபத்தில் இருக்கிறேன். அவர் எனக்கு லியோ படத்தில் பெரிய அளவிலான கதாபாத்திரத்தை கொடுக்கவே இல்லை. அவர் என்னை ரொம்பவே வீணடித்து விட்டார். எனக்கு அஜித் சாரை ரொம்ப பிடிக்கும். அவர் எனக்கு நெருங்கிய நண்பர். ரஜினி சாரின் பல படங்களை நான் பார்த்திருக்கிறேன். இப்போது கூட கூலி படத்திற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full