பாகுபலி உள்ளிட்ட சில தெலுங்கு படங்கள் தமிழிலும் வந்து வரவேற்பை பெற்றன. இந்நிலையில் முதன் முறையாக ஒரு மாபெரும் கன்னட படம் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அது தான் கன்னட நடிகர் யாஷ் நடித்த கே ஜி எப் திரைப்படம். கன்னட சினிமாவின் ராகிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் யாஷ் என்பவர் நடித்துள்ள இந்த திரைப்படம் இதுவரை வெளிவந்த கன்னட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வெளியாகியுள்ளது.

பிற மொழியில் நேரடியாக வெளியாகியுள்ள இந்த படம் ஆச்சரியப்படுத்தும் விதமாக தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்ப்பை பெற்றது.யாஷ் கடந்த ‘ஜம்பட ஹுகுடி’ என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி தந்தது கே ஜி எப் திரைப்படம் தான். இந்த படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது.

Advertisement

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பகத்திற்கான படப்பிடிப்புகள் துவங்கியது. மேலும், இந்த படத்தில் அதிரா என்ற முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்து வந்தார். இந்த நிலையில் நடிகர் சஞ்சய் தத்துக்கு புற்று நோய் ஏற்பட்டது சிகிச்சை பெற்று வருவதால், சினிமாவில் இருந்து சில மாதங்கள் விலகுவதாக அறிவித்து இருந்தார்.

Advertisement

இதனால் சஞ்சய் தத், கே ஜி எப் படத்தில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து படக்குழுவினர் அறிவித்துள்ளது என்னவெனில், தன்னால் அடுத்த 3 மாதங்களுக்குப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாது எனக் கூறியுள்ளார். ‘கே.ஜி.எஃப் 2’ படத்தில் அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு என்பது கிட்டதட்ட முடிந்துவிட்டது. இன்னும் 3 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே அவருக்கு இருக்கிறது. அதுவும், அவருக்கான க்ளாஸ் அப் மற்றும் நடந்து வரும் சிறுசிறு காட்சிகள் தான் என்று தெரிவித்துள்ளனர்.

Advertisement
Advertisement