ஐபிஎல் தொடர் படு மும்மரமாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர் இடம் பிடித்தனர்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், வரும் மே 30-ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற உள்ள இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் மோதவுள்ளன.

Advertisement

இதில் தேர்வு குழு கூட்டம் முடிவில் உலக கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் 2-வது விக்கெட் கீப்பர் யார்? என்பதில் 33 வயதான தமிழகத்தை தினேஷ் கார்த்திக், 21 வயதான ரிஷாப் பான்ட் இடையே போட்டி நிலவியது. இதில் ரிஷாப் பான்டுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அனுபவத்தின் அடிப்படையில் தினேஷ் கார்த்திக் 2-வது விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டார்.

அதே போல உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் 10 ஒருநாள் போட்டிகளில் கூட விளையாடாத விஜய் சங்கருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் 9 போட்டிகளில் விளையாடி 165 ரன்கள் எடுத்துள்ளார்.

Advertisement

இந்த நிலையில் உலக கோப்பை அணியில் தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் சங்கர் இடம்பெற்றிருப்பதில் விருப்பம் இல்லாதது போல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சுராகர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதற்கு பல்வேறு கிரிக்கெட் ரசிகர்களும் சஞ்சய் மஞ்சுராகரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Advertisement
Advertisement