மகளின் முதல் பிறந்தநாளை கோலாகளமாக கொண்டாடிய சஞ்சீவ் - ஆல்யா. வந்த எல்லாருக்கும் ரிட்டர்ன் கிப்ட் (இதுக்கே பல ஆயிரம் ஆயிருக்குமே)

By Rajkumar · 27/3/2021

விஜய் தொலைக்காட்சியில் சமீப காலமாகவே சினிமா டைட்டல்களை மையமாக கொண்டு பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. கடைக்குட்டி சிங்கம் ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கிருவர் என்று சினிமா தலைப்புகளை வைத்து பல்வேறு சீரியல்கள் வந்தது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் செம்பா என்ற கதாபத்திரத்தில் ஆல்யா மானசாவும் கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தனர்.

இந்த சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே ஆலியா மானசா, சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு தான் இவர்களுக்கு பகிரங்கமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. விஜய் டிவியிலும் இதுகுறித்து அதிகமாக பேசப்பட்டு வந்தார்கள். ஆனால், இவர்கள் திருமணம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடந்தது. அதற்கு காரணம் ஆலியா மானசா வீட்டில் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது தான் என்று கூறப்படுகிறது.

இவர்களுடைய திருமணம் ரகசியமாக முடிவடைந்தாலும் திருமண வரவேற்பு விழா பிரம்மாண்டமாக சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்றது. கடந்த ஆண்டு இவர்களுக்கு ஆய்லா என்ற மகளும் பிறந்தார். திருமணத்திற்கு பின்னர் நடிகர் சஞ்சீவ் 'காற்றின் மொழி' தொடரில் நடித்து வருகிறார். அதே போல ஆல்யா மான்ஸா, ராஜா ராணி 2 தொடரில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர்களது மகள் 'அய்லா 'வின் முதல் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடினார்கள். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் ரிட்டர்ன் கிப்ட் என்ற பெயரில் புடவை மற்றும் சில பொருட்களை வழங்கியுள்ளனர். இதற்கே பல லட்சம் ஆகி இருக்கும். தற்போது விஜய் டிவியில் இருந்து வரும் ஜோடிகளின் இந்த ஜோடி தான் படு ரிச்சான ஜோடி. சீரியல் வட்டாரத்தில் BMW மற்றும் Mini Cooper கார் வைத்திருப்பவர்கள் இந்த ஜோடிகள் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full