நயன்தாராவை மூன்று காதலர்களுடன் இணைத்து கலாய்க்கும் A1 பட சினீக் பீக் வீடியோ.!

By Rajkumar · 24/7/2019

காமெடியனாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக அவதாரமெடுத்த சந்தானம் ஹீரோவாக நடித்த ஒரு சில படங்கள் நல்ல வெற்றியை அளித்தது. சந்தானம் இறுதியாக நடித்த 'தில்லுக்கு துட்டு 2' திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

https://www.youtube.com/watch?v=SNAHUl_vl-k&feature=youtu.be

இந்த படத்தை தொடர்ந்து சந்தானம் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இந்தப் படத்துக்குப் பிறகு, சந்தானம் நடித்து வரும் 'A 1' படத்தின் டீசர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. சந்தானத்தின் நண்பரான ராஜ் நாராயணன் சர்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் இப்படத்தைத் தயாரிக்கிறார். 

நாளைய இயக்குநர் நான்காவது சீசனின் டைட்டில் வின்னரான ஜான்சன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தானத்துடன் எம்.எஸ்.பாஸ்கர் 'கோலமாவு கோகிலா' ரெடின், டைகர் கார்டன்  தங்கதுரை, ஆதி படத்தில் வில்லனாக நடித்த சாய்குமார் குமார், சிவராமன் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

இந்த நிலையில் இந்த படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நடிகை நயன்தாராவின் முன்னாள் காதலர்களான சிம்பு மற்றும் பிரபு தேவாவுடனும், தற்போதைய காதலரான விக்னேஷ் சிவனுடனும் இணைத்து நயன்தாராவை கலாய்ப்பது போல ஒரு காட்சி வெளியாகியுள்ளது. தற்போது இந்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full