வரவங்க, போறவங்களுக்காக எல்லாம் மாத்த முடியாது, ஆனால் - 'கோவிந்தா' பாடல் சர்ச்சைக்கு சந்தானம் பளீச் பதில்
செய்தியாளர் சந்திப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் தொடர்பாக நடிகர் சந்தானம் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடியானாக தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சந்தானம். சந்தானத்தைப் பொறுத்தவரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். அதன் பின் சந்தானத்தை வெள்ளி திரைக்கு அழைத்து வந்தவர் நடிகர் சிம்பு தான். தனது ‘மன்மதன்’ படத்தின் மூலம் சந்தானத்தை சினிமாவில் சிம்பு அறிமுகம் செய்து இருந்தார்.
அதுமட்டுமில்லாமல், சந்தானத்திற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை மற்ற நடிகர்கள் மற்றும் இயக்குனர்களிடம் பேசி சிம்பு வாங்கிக் கொடுத்தார். பின் சந்தானம் பிரபலமான காமெடி நடிகர் ஆனார். இவர் தமிழ் சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருந்தார். அதன் பின் சமீப காலமாக சந்தானம் ஹீரோவாக நடித்து வருகிறார். அதோடு தமிழ் சினிமாவில் காமெடியனாக கொடி கட்டி பறந்த சந்தானம் சில வருடமாக கதாநாயகனாக மட்டும் தான் நடிப்பேன் என திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
டிடி நெக்ஸ்ட் லெவல்:
மேலும், சமீபத்தில் சந்தானம் காமெடியனாக நடித்த ‘மதகஜராஜா’ திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகி இருந்ததால் ரசிகர்கள் கொண்டாடி இருந்தார்கள். இயக்குனர் சுந்தர்.சி இயக்கிய படத்தில் சந்தானத்துடன் இணைந்து விஷால், வரலட்சுமி, அஞ்சலி நடித்திருந்தார்கள். இந்த படம் நல்ல வசூலையும் செய்து இருந்தது. தற்போது சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்க படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்த படத்தில் சந்தானம் அண்ட் கோவுடன் கௌதமேனன், செல்வராகவன் உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
சந்தானம் பேட்டி:
இந்த படத்தை ஆர்யா தான் தயாரித்து இருக்கிறார். இந்த படம் வருகிற 16-ம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. தற்போது படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. இதில் ஆர்யா, சந்தானம், இயக்குனர் பிரேம் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். அதில் சந்தானம், இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் கோவிந்தா பாடல் கடவுளை கிண்டல் செய்வது கிடையாது.
https://www.youtube.com/watch?v=eYj4MYn-vfM
விமர்சனங்கள் பற்றி சொன்னது:
நிறைய பேர் நிறைய விஷயங்களை சொல்வார்கள். படம் பார்க்கும் பலருக்கு இது சரியில்லை, மாற்ற வேண்டும் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், அது எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி வாழவும் முடியாது. நீதிமன்றம் சொல்வதையும், தணிக்கை குழு சொல்வதையும் தான் தமிழ் சினிமாவில் செய்ய முடியும். போறவர்கள் வருபவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டு பண்ண முடியாது. பெருமாள் கடவுள், கோவிந்தா கோவிந்தா பாடலை படத்தில் கிண்டல் செய்வதாக கிடையாது. நான் கடவுள் நம்பிக்கை கொண்டவன் தான்.
https://www.youtube.com/watch?v=R1cwxC0aKfQ
பாடல் சர்ச்சை:
நான் கடவுளை கிண்டல் செய்ய மாட்டேன். படத்தை பார்ப்பதற்கு ஆர்வத்தை தூண்டுவதற்கான காட்சிகளை கட் செய்து டிரெய்லரில் அப்படியே வைத்திருப்போம். அதை பார்க்கும்போது உங்களுக்குள்கேள்விகள் எழும். அதேபோல் உயிரின் உயிரே பாடலை பயன்படுத்தியது கிண்டலாலுக்காக இல்லை. கௌதம் சார் காக்க காக்க படத்தினுடைய இயக்குனர். அதை அவர் ஒரு காரணத்திற்காக செய்யும்போது அது தவறாக இருக்காது. நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தால் முன்பு இருந்தது போன்ற கதாபாத்திரம் போல இருக்காது. புதிதாக ஒன்றை பண்ணுவேன். நிறைய படங்களில் இப்படியே பண்ணி நடிப்பேன் என்று தெரியாது. ஆனால், நிச்சயமாக பழைய கதாபாத்திரங்களை போல பண்ண முடியாது என்று
கூறி இருக்கிறார்.