தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு காமெடியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். இவர் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது தமிழ் நகைச்சுவை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதை தொடர்ந்து சினிமா காமடியனாக சினிமாவில் அறிமுகமான சந்தானம் தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார். இவர் ஹீரோவாக நடித்த சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படி ஒரு நிலையில் சந்தானம் வாரிசு மற்றும் துணிவு படம் குறித்து பேசி இருக்கிறார். நீண்ட வருடங்களுக்கு பின்னர் அஜித் மற்றும் விஜய் படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேருக்கு நேர் மோத இருக்கிறது. இதில் வாரிசு படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். பொங்கல் பண்டிகை ஒட்டி தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா, பாலகிருஷ்ணாவின் வீர சிம்மா ரெட்டி போன்ற படங்கள் வெளியாக இருக்கிறது. இப்படி மூன்று முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக இருக்கிறது.

Advertisement

தற்போது இன்னொரு பிரச்சனை கிளம்பி இருக்கிறது. அதாவது, கடந்த 2017 ஆம் ஆண்டு தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் நடந்தது. அதில் தில்ராஜு கலந்துகொண்டு, பொங்கல் மற்றும் தசரா பண்டிகையின் போது அதிக அளவில் டப்பிங் செய்யப்பட்ட படங்களுக்கே திரையரங்குகள் ஒதுக்கப்படுகிறது. நேரடி தெலுங்கு படத்திற்கு வாய்ப்புகள் கிடைக்க திரையரங்கு ஒதுக்கப்படுவதில்லை. இதனால் தெலுங்கு சினிமாவை நிலைநிறுத்த இனிமேல் நேரடி தெலுங்கு படங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

மிச்சம் இருக்கும் திரையரங்கில் தான் டப்பிங் படங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.இப்படி இவர் கூறியிருந்தது தற்போது சிக்கலாக இருக்கிறது. விஜயின் வாரிசு படம் முழுக்க முழுக்க தமிழ் படம் என்று அவரே பேட்டியில் கூறியிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் பொங்கல் பண்டிகை அன்று வாரிசு படத்தை தெலுங்கு மொழியில் வெளியிடுவதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் வாரிசு படம் வெளியாகும் அதே நாளில் பிரபல நடிகர்களின் படங்கள் வெளியாவதால் வாரிசு படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது.

Advertisement

இந்த நிலையில் சமீபத்தில் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் பிரஸ் மீட் ஒன்றில் சந்தானம் பங்கேற்று இருந்தார். அப்போது அவரிடம் தெலுங்கு சினிமாவில் வாரிசு படம் சந்திக்கும் பிரச்சனை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு சந்தானம் ‘அது இன்னொரு மாநிலத்தின் பிரச்சனை, அதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்’ என்று பேசி இருக்கிறார். மேலும், நாம் இங்கு தமிழ் முதலில் தமிழ் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

Advertisement

மேலும், பத்திரிகையாளர் ஒருவர் வாரிசு அல்லது துணிவு எந்த படத்தை நீங்கள் முதலில் பார்ப்பீர்கள் என்று கேள்வி எழுப்பி இருந்தார் அதற்கு சந்தானம் ‘அவரை அழைத்து தோளில் கைபோட்டு ‘நீ எந்த படம் பாப்ப என்று கேட்டார். அதற்கு அந்த பத்திரிகையாளர் நான் இரண்டு படத்தையும் பார்ப்பேன் என்று கூறி இருந்தார். அதற்கு சந்தானம் நீ மட்டும் ரெண்டு படம் பார்க்கும் போது நான் பார்க்க மாட்டனா என்று தோனி ஸ்டைலில் பதில் அளித்துள்ளார்.

Advertisement