தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு காமெடியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் சந்தானம். இவர் வின் டிவி எனும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டீக்கடை பெஞ்ச் என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் மீடியாவிற்குள் நுழைந்தார். பின் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் மக்களிடையே பிரபலமானார். மேலும், பல போராட்டங்களுக்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. குணால் நடித்த ‘ பேசாத கண்ணும் பேசுமே’ என்ற படத்தில் சிறு காட்சியில் சந்தானம் தோன்றியிருப்பார். அதன் பின் காதல் அழிவதில்லை படத்தில் நடித்திருந்தார் சந்தானம்.

அதனை தொடர்ந்து சந்தானம் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக ஜொலித்து கொண்டு இருந்தார். பின் இவர் கடந்த சில வாருடங்களாக சினிமாவில் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார். சந்தானம் இறுதியாக ‘சபாபதி’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் காமெடி-குடும்ப சென்டிமென்ட் கலந்த படமாக உருவாகி இருந்தது. ஆனால், பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. இந்த படத்திற்கு முன்பாக சந்தானம் நடிப்பில் வெளியான டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருந்தது.

Advertisement

சந்தானம் நடிக்கும் படங்கள்:

தற்போது சந்தானம் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சந்தானம் இப்படம் தெலுங்கில் நவீன் பொலிசெட்டி நடிப்பில் கடந்த 2019 ஆண்டு வெளியான சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காகும். இந்தப் படத்தை மனோஜ் பீதா இயக்கி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் குலுகுலு படத்திலும் சந்தானம் நடித்து இருக்கிறார். தற்போது இந்த படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது. இன்னொரு பக்கம் கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜின் இயக்கத்தில் சந்தானம் நடிக்க இருக்கிறார்.

விவேக் குறித்து சந்தானம் சொன்னது:

இந்த படத்தின் ஷூட்டிங் பெங்களூரில் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சந்தானம் பிரபல சேனலுக்கு பேட்டி ஒன்று கொடுத்து இருக்கிறார். அதில் அவர் விவேக், வடிவேலு குறித்து கூறியிருப்பது, விவேக் சார் என்னோடு சக்க போடு போடு ராஜா படத்தில் நடித்து இருக்கிறார். அவருடைய இழப்பு தமிழ் திரை உலகிற்கு பெரிய இழப்பு தான். அவரோட பாணி காமெடி பண்ண இங்க யாருமே இல்லை. அவருடைய காமெடிகள் எல்லாம் பெரியார் சிந்தனைகளை கலந்து சொல்லியிருக்கிறார். அவருடன் நடிக்கும்போது ஸ்பாட்டில் நிறைய விஷயங்கள் பேசி இருக்கிறார். நல்ல மனிதர். அவருடைய இறப்பின் போது அவரது வீட்டுக்குப் போய் இருக்கேன்.

Advertisement

வடிவேலு குறித்து கூறியது:

விவேக் சார் ஒரு ட்ராக் என்றால் வடிவேல் சார் வேறொரு டிராக். அவர் கம்பேக் நல்ல விஷயம். அவர் இன்னும் நிறைய காமெடிகள் பண்ணனும். மீம்ஸ் எல்லாம் அவரை வைத்து எடுத்து வைத்து தான் இன்னும் போய்க்கொண்டிருக்கிறது. புதுப்புது விஷயங்களை அவர் பண்ணனும். அவர் படங்களை பார்க்க வேண்டும் என்று எனக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. நான் ஹீரோவாகி விட்டேன். அதனால் என்னுடைய கதாபாத்திரம் தாண்டி என்னாலயும் காமெடிக்கு போக முடியவில்லை. வடிவேல் சார் மாதிரி யாராலுமே பண்ண முடியாது. இங்கே யாருடைய ஸ்டைலையும், இடத்தையும் யாராலும் நிரப்ப முடியாது. எம்ஜிஆர் இருந்தார். அவருக்கு பிறகு அவரைப் போல யார் என்று பார்த்தால் யாருமே இல்லை.

Advertisement

நடிகர்கள் குறித்து சந்தானம் சொன்னது:

அவருடைய இடம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. பிறகு சிவாஜி சார் வந்தார். அவர் இடம் காலியாகத்தான் இருந்தது. அப்புறம் கமல் சார் ரஜினி சார் வந்தார். ஆனாலும், எம்ஜிஆர், சிவாஜி, சார் இடத்துக்கு ரீப்ளேஸ்மென்ட்டா யாரையும் சொல்ல முடியாது. அதைப்போலத்தான் காமெடி நடிகர்களின் இடமும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருத்தர் வருவார்கள். இவர் இடத்துக்கு இவர் வந்துவிட்டார் என்று ரொம்ப வருஷமாக சொல்லிட்டு இருக்கிறார்கள். ஆனால், அப்படி யாருமே வர முடியாது. ஒவ்வொருவரும் யூனிக். கடவுளின் படைப்பும் அதுதான் என்று கூறியிருந்தார்.

Advertisement