ஆலயங்கள் அவர்களால் நிர்வகிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது - சத்குரு போட்ட டீவீட்டுக்கு ஆதரவு தெரிவித்த சந்தானம். ரசிகர்களின் ரியாக்ஷனை பாருங்க.
ஈஷ யோகா நிறுவனர் சத்குரு கோவில்களை பற்றி போட்ட டீவீட்டுக்கு சந்தானம் ஆதரவு தெரிவித்துள்ளார். சத்குருவிற்கும் பெரிதாக அறிமுகம் தேவையில்லை ஆன்மீக சொற்பொழிவாளரான இவர் ஈஷா யோகா சிவன் சிலை மூலம் பெரும் பிரபலமடைந்தார். மேலும், பல சதுர கிலோ மீட்டரை அழித்து தான் சத்குரு ஈஷா யோகா சிவன் சிலையை கட்டினார் என்று பலர் சர்ச்சைகள் கூட எழுந்தது. சத்குருவிற்கு சாமானிய மக்களை போல தமிழ் திரையுலகில் பல நடிகர் நடிகைகளும் பக்தர்கள் தான்.
https://twitter.com/SadhguruJV/status/1348574167881289728
தமிழ் சினிமாவில் முன்னணி நடிககைகளான காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், தமன்னா என்று பலர் இவரின் பக்தர்கள் தான். இவர் நடத்தும் சிவராத்திரி பூஜையில் இவர்கள் அடிக்கடி கலந்துகொண்டுள்ளனர். இவர்களை போலவே சந்தானமும் சத்குருவின் தீவிர பக்தர் தான். இப்படி ஒரு நிலையில் சத்குரு, கோவில்களை பற்றி ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில், தமிழக கோவில்கள் அரசு நிர்வாகத்தின் பிடியிலுள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி ஸ்தலங்களின் புனிதம் சேதப்படுத்தப்படுகிறது.
ஆலயங்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது, அதிகாரிகளாலும் அரசியல் சக்திகளாலும் அல்ல என்று பதிவிட்டு நாட்டின் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரை டேக் செய்து இருந்தார். அதே போல மற்றோரு டீவீட்டில், வழிபாட்டுத்_தலங்கள் நியாயத்துடன் நடத்தப்படவேண்டும் எனக் கேட்பது எப்படி அரசியல் நகர்வாக முடியும்? என் தாழ்மையான வேண்டுகோள்.
https://twitter.com/pkcomrade/status/1365593393997508608
ஆன்மீகம் தோய்ந்த இக்கலாச்சாரத்தில், #வழிபடுவோர் கோயில்களை நிர்வகித்து வளர்க்கட்டும். இதில் அரசியல் நோக்கமில்லை. அவர்கள் 1947லேயே வெளியேறிவிட்டனர் என்று பதிவிட்டுள்ளார். சத்குருவின் இந்த ட்வீட் குறித்து நடிகர் சந்தானம் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில், சத்குருவின் கருத்தை முற்றிலும் ஒப்புக்கொள்கிறேன். பக்தர்களிடம் கோவில்களை விட்டுவிடுங்கள்.
https://twitter.com/arDARKER/status/1365594309467070465
சந்தானத்தின் இந்த டீவீட்டை பார்த்த பலர், சந்தானத்தை அடுத்த சங்கீ என்று கேலி செய்து வருகின்றனர்.