சந்தானம்-ஆர்யா கூட்டணியில் வெளிவந்த 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

By subhashini · 16/5/2025

நடிகர் சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் டிடி நெக்ஸ்ட் லெவல். தில்லுக்கு துட்டு படம் வரிசையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை நடிகர் ஆர்யா தான் தயாரித்திருக்கிறார். இந்த படத்தை பிரேம் ஆனந்த் என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், மொட்டை ராஜேந்திரன், யாஷிகா, கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் சந்தானம் அவர்கள் சினிமா விமர்சகராக இருக்கிறார். இவர் நண்பர் தான் மொட்டை ராஜேந்திரன். இவர்கள் இயக்குனர் செல்வராகவனின் படத்தை பார்க்கப் போகிறார்கள். அது சினிமா விமர்சனங்களை பழிவாங்க எடுக்கப்பட்ட படம். இதில் சந்தானமும் அவருடைய ஆட்களுமே படத்திற்குள் சிக்கிக் கொள்கிறார்கள். ஆனால், சந்தானத்திற்கு முன்பு அவருடைய குடும்பத்தினர்கள் சென்று அங்கு மாட்டிக் கொள்கிறார்கள்.

அதற்குப் பின் தான் சந்தானமும் அவருடைய நண்பர் மொட்டை ராஜேந்திரனும் திரைக்குள் செல்கிறார்கள்.
அதோடு அந்த படத்தில் சந்தானத்தின் குடும்பம் நடிகர்களாக இருக்கிறார்கள். சந்தானத்தின் காதலி தான் பேயாகவே இருக்கிறார். அவர் ஏன் பேயாக மாறினார்? திரைக்குள் இருந்து தன்னுடைய குடும்பத்தை சந்தானம் எப்படி வெளியே கொண்டு வந்தார்? செல்வராகவனுக்கும் சந்தானத்திற்கும் இடையே என்ன பிரச்சனை? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.

டிடி பட வரிசையில் இது நான்காவது படம். இதுவரை வெளியான மூன்று படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த படமும் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றிருக்கிறது. ஒரு திகில் காமெடி ஜோனரில் சந்தானம் இந்த படத்தை கொண்டு சென்றிருக்கிறார்.சினிமா விமர்சகர்களை பழிவாங்கும் பேய், திரைக்குள் சென்று மாட்டிக்கொள்ளும் ஹீரோ என்று ஒரு வித்தியாசமான ஜானரில் இயக்குனர் கையாண்டிருப்பது பாராட்டுக்குரிய உண்டு.

https://youtu.be/KuFVwiPzZGk

அதை கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். படத்தில் நிறைய இடங்களில் சந்தானம் ப்ரோ ப்ரோ என்று பேசும் மாடுலேஷன் தான் கடுப்பை ஏற்றி இருக்கிறது.
அசால்டாக காமெடியில் கலக்கும் சந்தானம் இந்த படத்தில் ஹீரோவாக இருந்தாலும் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் சிரிக்க வைத்திருக்கிறார். ஆனால், சில இடங்களில் அவருடைய காமெடிகள் பெரிதாக சிரிக்க வைக்கவில்லை.

மேலும், சந்தானத்தின் நடிப்பு நன்றாக இருக்கிறது. இவரை அடுத்து படத்தில் வரும் கௌதம் மேனன், மொட்டை ராஜேந்திரன், செல்வராகவன் காட்சிகள் எல்லாம் அருமையாக இருக்கிறது. படத்தினுடைய செட் சூப்பர், வி எஃப் எக்ஸ் வேலையில் இயக்குனர் நிறைய கவனம் செலுத்தி இருக்கிறார். ஆனால், ஸ்கிரிப்டில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். மொத்தத்தில் இந்த படம் ஒருமுறை சென்று பார்க்கலாம்.

நிறை:

சந்தானம் நடிப்பு

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

கதைக்களம் ஓகே

விஎப்எக்ஸ் காட்சிகள், படத்தின் செட் அருமை

காமெடிகள் நன்றாக இருக்கிறது.

முதல் பாதி நன்றாக இருக்கிறது.

குறை:

இயக்குனர் கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் நிறையவே கவனம் செலுத்தி இருக்கலாம்

இரண்டாம் பாதியில் நிறையவே கவனம் செலுத்தி இருக்கலாம்

சில இடங்களில் சந்தானத்தின் காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை

ஆங்காங்கே லாஜிக் குறைபாடுகள்

மொத்தத்தில் டிடி நெக்ஸ்ட் லெவல் - காமெடி திரில்லர் குறைவு

behindtalkies AMP · Quick view
View full