காதல் அழிவதில்லை படத்திற்கு முன்பாவே சினிமாவில் தோன்றியுள்ள சந்தானம். அதுவும் மறைந்த இந்த இளம் நடிகர் படத்தில்.

By Rajkumar · 30/4/2020

தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு காமெடியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் வின் டிவி எனும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டீக்கடை பெஞ்ச் என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் மீடியாவிற்கு நுழைந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் மக்களிடையே பிரபலமானார்.

காதல் அழிவதில்லை படத்தில் சந்தானம்

அதனை தொடர்ந்து இவர் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வந்தார். பின்னர் நடிகை ராதிகா இயக்கிய அண்ணாமலை என்ற தொடரிலும் நடிகர் சந்தானம் நடித்து இருந்தார். ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை நிரூபித்த சந்தானம் பல போராட்டங்களுக்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதையும் பாருங்க : என்ன கன்றாவி போஸ் இது ? கோமாளி பட நடிகை கொடுத்த போஸை விமர்சித்த ரசிகர்கள்.

இந்நிலையில் நடிகர் சிலம்பரசன் தமிழ் சினிமா உலகில் ஹீரோவாக அறிமுகமான காதல் அழிவதில்லை படம் தான் சந்தானத்திற்கு முதல் படம் என்று தான் பலருக்கும் தெரியும். ஆனால், அந்த படம் சந்தானத்திற்கு முதல் படம் இல்லை. அதற்கு முன்பாகவே நடிகர் சந்தானம் சினிமாவில் சிறு காட்சியில் தோன்றியுள்ளார்.

பேசாத கண்ணும் பேசுமே படத்தில் சந்தானம்

ஆம், கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குனர் முரளி கிருஷ்ணா இயக்கத்தில் குணால் மற்றும் மோனல் நடிப்பில் வெளியான பேசாத கண்ணும் பேசுமே என்ற படத்தில் சிறு காட்சியில் தோன்றியிருப்பார் சந்தானம். இந்த திரைப்படத்திற்கு பின்னர் தான் காதல் அழிவதில்லை படத்தில் நடித்திருந்தார் சந்தானம்.

ஆனால், இந்த இரண்டு படங்களிலுமே சந்தனத்திற்கு அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. நடிகர் சந்தானத்தின் பெயர் முதன் முறையாக டைட்டில் கார்ட்டில் வந்தது வல்லவன் படத்தில் தான். வல்லவன் படத்தில் தான் நடிகர் சந்தானம் நடிகர் என்ற முத்திரையை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full