தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக இருந்து முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் சந்தானம். இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். நடிகர் சந்தானம் அவர்கள் ஹீரோவாக நடித்த தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2 , ஏ1 போன்ற பல படங்கள் தொடர்ச்சியாக வெற்றி படங்களாக அமைந்தது. சமீபத்தில் சந்தானம் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்த டகால்டி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் சந்தானத்தின் ரசிகர் மன்ற நிர்வாகியின் தந்தை இறந்ததால் நேரில் சென்று இறுதி மரியாதை செய்துள்ளார் நடிகர் சந்தானம். சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலத்திலேயே இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்த நிலையில் நடிகர் சந்தானம் ரசிகர் மன்ற தலைவர் குமாரவேலின் தந்தை சில தினங்களுக்கு முன் உடல்நலக் குறைவால் ஸ்ரீபெரும்புதூரில் இறந்து உள்ளார். ரசிகரின் தந்தை மரணமடைந்த தகவலை அறிந்த சந்தானம் உடனே நேரில் சென்று அவருக்கு இறுதி மரியாதை செய்துள்ளார். தனது ரசிகரின் தந்தை மரணத்தைப் பார்த்த சந்தானம் கண்ணீர் விட்டு அழுது தனது இரங்கலை தெரிவித்து உள்ளார்.

Advertisement

பிரபல நடிகர் தனது ரசிகரின் தந்தைக்காக அழுததை பார்த்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் நெகிழ்ந்து போனார்கள். அதோடு சந்தானம் அவர்கள் ரசிகரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு திரும்பியுள்ளார். மேலும், சமீபத்தில் தான் நடிகர் சந்தானத்தின் நண்பரான சேது என்பவர் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகர் சந்தானம் அவர்கள் மூன்று கெட்டப்பில் ‘டிக்கிலோனா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் நடிகர் சந்தானத்தோடு இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், அனகா, ஷிரின், யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், நிழல்கள் ரவி, சித்ரா லெட்சுமணன், முனிஷ்காந்த், ராஜேந்திரன், ரவி, என நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். இந்த படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார். இப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்தியது.

Advertisement
Advertisement