இதுவரை நான் ரெண்டு பேர் கிட்ட தான் வாய்ப்பு கேட்டேன் - சந்தோஷ் நாராயணன் சொன்ன சீக்ரெட்

By subhashini · 29/4/2025

பா.ரஞ்சித் உடன் இணைந்து பணியாற்றுவது பற்றி சந்தோஷ் நாராயணன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இசை அமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் திகழ்கிறார். பா. ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி முதல் சார்பட்டா பரம்பரை படம் வரை இணைந்து பணியாற்றி இருக்கிறார் சந்தோஷ் நாராயணன். ஆனால், கடைசியாக பா. ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தில் சந்தோஷ் நாராயணன் பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பா. ரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் இருவரும் நெருங்கிய நண்பர்களாக தமிழ் சினிமாவையே கலக்கி கொண்டிருந்தார்கள். பின் இருவரும் இலேசான மனஸ்தாபம் காரணமாக பிரிந்து இருந்தனர். அதோடு இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து இனி பணியாற்றிய வாய்ப்பில்லை என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அப்படி இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட காரணம் சந்தோஷ் நாராயணனின் மகள் பாடகி தீ பாடிய என்ஜாய் எஞ்சாமி பாடல் தான்.

சந்தோஷ் நாராயணன் குறித்த தகவல்:

இவருடன் இந்த பாடலை ராப் பாடகர் அறிவு என்பவரும் இணைந்து பாடி இருந்தார். இந்த பாடல் 2021 ஆம் ஆண்டு யூடியூபில் வெளியாகி இருந்தது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பின் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விழாவில் எஞ்சாயி எஞ்சாமி பாடலை பாடகி தீ மட்டும் பாடி இருந்தார். ஆனால் , இந்த பாடலின் வெற்றிக்கு முக்கிய பங்காக இருந்த அறிவு இந்த விழாவில் வரவில்லை. இந்த விவகாரம் குறித்து பாடகர் அறிவு, நீங்கள் உறங்கும் போது உங்கள் பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் அபகரிக்கலாம். நீங்கள் விழித்திருக்கும் போது ஒருபோதும் அது நடக்காது. முடிவில் எப்பொழுதும் உண்மையே வெல்லும் என பதிவிட்டு இருந்தார்.

சந்தோஷ் நாராயணன்- ரஞ்சித் சர்ச்சை:

இந்த விவாகரத்திற்கு பின்னர் சந்தோஷ் நாராயணன் – அறிவு கூட்டணி பிரிந்துவிட்டது. அதுமட்டுமில்லாமல் அறிவுக்கு ஆதரவாக பா.ரஞ்சித் இருந்ததால் சந்தோஷ் நாராயணன்- ரஞ்சித் உடைய கூட்டணியும் பிரிந்தது.
அதற்குப்பின் சந்தோஷ் நாராயணன் விளக்கம் கொடுத்திருந்தார். பின் ஒரு வழியாக இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது என்று கூறப்பட்டது. இருந்தாலுமே பா.ரஞ்சித்- சந்தோஷ் இருவரும் இணைந்து பணியாற்றவில்லை. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் இது தொடர்பாக சந்தோஷ் நாராயணன் கூறியிருப்பது, பா.ரஞ்சித்துடன் நான் எப்போது வேண்டும் என்றாலும் சேர்ந்து வேலை செய்வேன்.

சந்தோஷ் நாராயணன் பேட்டி:

அதற்கு நான் ரெடியாகத்தான் இருக்கிறேன். அடுத்தடுத்து தொடர்ந்து ஒருவர் உடன் பணியாற்றுவதற்கு இரண்டு இடங்களில் மட்டும் தான் நானே சென்று கேட்டிருக்கிறேன். கல்கி படத்தில் என்னை மீண்டும் மியூசிக் டைரக்டராக படக்குழு நியமிப்பார்களா? என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. காரணம், முதல் பாகத்தில் மியூசிக் மோசமாக இருக்கிறது என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. இது குறித்து நான் இயக்குனரிடமும் பயந்து பயந்து கேட்டேன். அதேபோல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தில் மியூசிக் டைரக்டராக பணியாற்ற அவரிடம் கேட்டேன்.

https://www.youtube.com/watch?v=j_HPou8lUmw

பா.ரஞ்சித் கூட்டணி பற்றி சொன்னது:

அதற்கு பின் கார்த்திக், இல்லை நான் சொல்கிறேன் என்று சொன்னார். அதைக் கேட்டவுடன் எனக்கு, ஐயோ என்ன கார்த்திக் இப்படி சொல்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு பிறகு தான் அந்த படத்தில் அனிருத் கமிட் ஆகி இருந்தார். இப்போது எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. எனக்கு வேண்டாம் என்று சொல்வதற்கு நிறைய பிராஜெக்ட்கள் இருக்கின்றது. அந்த இடத்திற்கு நான் வந்து விட்டேன். என்னுடன் பணியாற்றியவர்கள் வேறு ஒருவருடன் பணியாற்றினாலும் கூட நாங்கள் மீண்டும் சேர்ந்து பணியாற்ற இருக்கிறோம். சினிமா என்பது ஒரு கேம். அந்த இடத்தில் நீங்கள் தவிர்க்க முடியாத ஆளாக இருக்கும் போது நிச்சயமாக உங்களுக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கும். காம்பினேஷன் என்பதெல்லாம் பழைய விஷயமாக மாறிவிட்டது என்று கூறி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full