150 ரூபாய் கூட இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டேன், ஓசுல வந்த டிவிய வாங்க முடியல சந்தோஷ் நாராயணன் ஓபன் டாக்

By subhashini · 12/11/2025

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் முனீஸ்காந்த். ஆரம்பத்தில் இவர் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின் இவர் கலைஞர் டிவியில் நடந்த நாளைய இயக்குனர் என்ற குறும்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதற்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. இப்படி தொடர்ந்து சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சூது கவ்வும், பீட்சா, ஈஸ்வரன், பேச்சுலர் போன்ற படங்களின் மூலம் கவனிக்கப்பட்டார். தற்போது இவர் பல முன்னணி நட்சத்திரங்களின் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார்.

சமீபத்தில் சுந்தர்.சி இயக்கி நடிப்பில் வெளியாகியிருந்த கேங்கர்ஸ் படத்தில் ஒரு முக்கியமான ரோலில் முனீஷ்காந்த் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று தந்திருந்தது. இதை தொடர்ந்தும் இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகர் முனீஷ்காந்த் ஹீரோவாக நடித்திருக்கும் படம் மிடில் கிளாஸ். இந்த படத்தை கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியிருக்கிறார்.

மிடில் கிளாஸ் படம்:

இந்த படத்தில் விஜயலட்சுமி, காளி வெங்கட், ராதாரவி, குரேசி, வேலராமமூர்த்தி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் நவம்பர் 21ஆம் தேதி திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றிருந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒருமுறை எனக்கு பெங்களூரில் வேலைவாய்ப்பு வந்தது. முதல் முறையாக நானும் வேலைக்காக விமானத்தில் பயணம் செய்தேன்.

சந்தோஷ் நாராயணன் பேட்டி:

இதனால் 5000 ரூபாய் செலவானது. நான் சீடி கவரில் தான் சில்லறை காசு சேர்த்து வைப்பேன். அந்த காசை எடுத்து விட்டால் எக்னாமிக் டிசாஸ்டர் வந்துவிட்டது என்று அர்த்தம். அந்த காசை எல்லாம் எடுத்துக்கொண்டு தான் நான் பெங்களூர் போனேன். திரும்பி வரும்போது என்னிடம் வெறும் 150 ரூபாய் தான் இருந்தது. விமானத்தில் பயணித்த போது குழுக்கள் முறையில் நான் டிவி வின் பண்ணி விட்டேன். அதற்கு டேக்ஸ் மட்டுமே ரூ.300 கட்ட சொன்னார்கள். ஆனால், என்னுடைய பர்சை தொலைத்து விட்டேன் என்று பொய் சொல்லி என்னிடம் இருந்து 150 ரூபாயை எடுத்துக் கொடுத்தேன். அதற்கு பிறகு மீதி 150 ரூபாயை அவர்களே போட்டு டிவியை அனுப்பி இருக்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=a9oQMnfX7qg

வாழ்க்கையில் பட்ட கஷ்டம்:

இருந்தும் அந்த டிவி எனக்கு வரவே இல்லை. காரணம், அந்த கொரியருக்கு என்னால் பணம் கொடுக்க முடியவில்லை. அந்த சமயத்தில் என்னிடம் போனில் ரீசார்ஜ்மில்லை. வாழ்க்கையில் ஒரு சைக்கிள் ஆப்
நத்திங்னஸ் இருக்கும். சென்னை வந்து எக்னாமிக்காக நாம் படும் கஷ்டமெல்லாம் நாமே தேடிக்கொள்வது தான். ஆனால், நாம் செய்யும் முயற்சி எப்போதுமே ஒருநாள் பலன் நடக்கும் . எனக்கு பிடித்ததை செய்தேன். அதற்கு கிடைத்த மதிப்பு தான் இவை எல்லாமே. ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறேன் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full