பெண்களுக்கு எதிராக கொடுமைகள் அதிகரிக்க இது தான் காரணம் - ஆவேசமாக சந்தோஷ் நாராயணன் சொன்னது

By subhashini · 7/11/2025

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் கௌரி கிஷன்.
96 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்போது இவர் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதை அடுத்து இவர் 96-2, LIK என படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். தற்போது இவருடைய நடிப்பில் தமிழில் உருவாகி இருக்கும் படம் அதர்ஸ். இந்த படத்தில் புதுமுக நடிகர் ஆதித்யா மாதவன் தான் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

இவருக்கு ஜோடியாக தான் கௌரி கிஷன் நடித்திருக்கிறார். இந்த படத்தை கிராண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தை அபின் ஹரிஹரன் இயக்கியிருக்கிறார். மெடிக்கல் கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படம் இன்று திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த படத்திற்கான ப்ரோமோஷனின் போது செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் படக்குழுவினருடன் நடிகை கௌரி கிஷன் கலந்து கொண்டிருந்தார்.

கௌரி கிஷன் பேட்டி:

அப்போது செய்தியாளர் ஹீரோவிடம், கௌரி கிஷனை தூக்கிறீர்களே, அவருடைய வெயிட் எவ்வளவு இருந்தது? என்று கேள்வி எழுப்பியிருந்தார்கள். இதை கேட்டு கோபப்பட்ட கௌரி கிஷன், என்னுடைய உடல் எடையை தெரிந்து வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்? ஒருவரை உடல் ரீதியாக அவமானப்படுத்துவதெல்லாம் கேள்வியா? நான் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். அதை குறித்து கேளுங்கள். இங்க நான் மட்டுமே தான் பெண். இப்படி பாடி ஷேமிங் செய்வது, அவமானப்படுத்துவதை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

https://www.youtube.com/watch?v=I1EB-Di2ljM

சந்தோஷ் நாராயணன் பதிவு:

ஒரு நடிகையினுடைய உடல் எடையை தெரிந்து கொள்வது அநாகரிகமானது. இதெல்லாம் ஒரு கேள்வியா? என்னைப் பற்றி stupid தனமாக கேட்ட கேள்விக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றெல்லாம் கேட்டிருந்தார். இதனால் பத்திரிகையாளருக்கும் கௌரி கிஷனுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது தொடர்ந்து பலரும் கௌரி கிஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் கௌரி கிஷனுக்கு ஆதரவாக சந்தோஷ் நாராயணன் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.

கௌரி கிஷனுக்கு ஆதரவு:

அதில் அவர், ஏற்கனவே அவமானமாக பேசியதோடு அதையே மீண்டும் மீண்டும் பேச தன்னிடம் உரிமை உண்டு என்று நினைக்கும் அந்த பத்திரிகையாளர் நடத்தை ரொம்பவே அருவருப்பாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. அவர் மீது எழுந்த எதிர்ப்பு முற்றிலுமே நியாயமானது. பெண்களுக்கு எதிரான கொடூர குற்றங்கள் இன்று அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு காரணம், இந்த மாதிரியான சிறிய அளவிலான அவமதிப்புகள் மற்றும் அத்துமீறல்கள் தான் என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். இந்த சம்பவத்தை தைரியமாக எதிர்கொண்ட கௌரி கிஷனுக்கு என்னுடைய பாராட்டுக்கள் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full