மீண்டும் இப்படி ஒரு படமா? இருட்டு அறையில் முரட்டு குத்து பட இயக்குனரின் அடுத்த பட டீசர் இதோ

By subhashini · 24/12/2023

இருட்டு அறையில் முரட்டு குத்து பட இயக்குனர் இயக்கியிருக்கும் புது படத்தினுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனரும் நடிகருமாக திகழ்பவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இவர் இயக்கத்தில் ஹர ஹர மஹா தேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த், இரண்டாம் குத்து, பொய்க்கால் குதிரை போன்ற படங்களை எல்லாம் வெளியாகி இருந்தது.

இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலமையான விமர்சனங்களை பெற்றிருந்தது. தற்போது சந்தோஷ் பி ஜெயக்குமார் நடித்திருக்கும் படம் தி பாய்ஸ். இந்த படத்தில் ஜெயிலர் ஹர்ஷத், கலக்கப்போவது யாரு வினோத், ஷா ரா, யுவராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அகமத் ஷெரிப் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். மேலும், இந்த படத்திற்கு அருண் மற்றும் கௌதம் ஆகியோர் இசையமைத்து இருக்கிறார்கள்.

தி பாய்ஸ் படம்:

சாம் ஆர் டி எக்ஸ் இந்த படத்தினுடைய படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு இருக்கிறது. கலை இயக்கத்தின் வேலைகளை எல்லாம் முஜிபீர் ரஹ்மான் செய்திருக்கிறார். இந்த படத்தை நோவா பிலிம்ஸ் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் செந்தில் குமார் தயாரித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை சந்தோஷ் பி ஜெயக்குமார் உடைய சொந்த பட நிறுவனமும் இணைந்து தயாரித்து இருக்கிறது.

படத்தினுடைய டீசர் மற்றும் டைட்டில் போஸ்டர்:

இந்த நிலையில் தற்போது இந்த படத்தினுடைய டீசர் மற்றும் டைட்டில் போஸ்டர் எல்லாம் வெளியாகி இருக்கிறது. இந்த படம் கல்ட் சினிமா என்று கூறப்படுகிறது. இன்றைய தலைமுறை இளைஞர்கள் மத்தியில் இந்த டீசர் நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றிருக்கிறது. இந்த படம் கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தினுடைய போஸ்டரை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவும், நடிகர் ஆர்யாவும் இணைந்து தான் வெளியிட்டு இருக்கிறார்கள்.

சந்தோஷ் பி ஜெயகுமார் பேட்டி:

இந்த படம் தொடர்பாக சமீபத்தில் சந்தோஷ் பி ஜெயகுமார் கூறியிருப்பது, ஐந்து இளம் பேச்சிலர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறோம். ஐந்து பேருமே இளமைக்காலத்தில் தவறான பழக்கங்களைக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய எதிர்காலமும் வாழ்வும் எப்படி இருக்கும் என்பதை தான் இந்த படத்தில் கல்ட் சினிமாவாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

https://www.youtube.com/watch?v=lCJxxaiLqrs

படம் குறித்து சொன்னது:

அதோட இந்த படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை. மாணவர்களாக நடித்திருக்கும் ஐந்து பேருமே வளரும் நட்சத்திரங்கள் தான் என்று கூறி இருக்கிறார். அதோடு இவருடைய இயக்கத்தில் ஏற்கனவே வெளிவந்த ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, இரண்டாம் குத்து போன்ற படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் சர்ச்சை கிளப்பி இருந்தது. அந்த வகையில் இந்த படமும் அடல்ட் படமாக இருக்குமா? எதை மையமாக வைத்து இயக்குனர் எடுத்திருக்கிறார்? என்ற பல எதிர்பார்ப்பு உடன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full