மன அழுத்தம், உடல் குறைவு, போராட்டங்களுக்கு பின் கிடைத்த பட்டம்- நெகிழ்ச்சியில் சசிகுமார் பட நடிகை

By subhashini · 20/7/2024

ஸ்காட்லாந்தில் நடிகை சனுஷா சந்தோஷ் பட்டப்படிப்பை முடித்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக அறியப்பட்டவர் நடிகை சனுஷா சந்தோஷ். இவர் கேரளாவை சேர்ந்தவர். இவர் சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் நுழைந்து விட்டார்.

கடந்த 2000-ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த தாதா சாகிப் என்ற படத்தின் மூலம் தான் முதன் முதலாக நடித்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார். மேலும், இவர்
காசி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். அதற்குப் பின் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார்.

சனுஷா சந்தோஷ் திரைப்பயணம்:

தமிழில் இவர் ரேணிகுண்டா, பீமா, அலெக்ஸ் பாண்டியன் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.
பின் சசிகுமார் நடிப்பில் வெளியாக இருந்த கொடிவீரன் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் பிரபலமாகவும் அறியப்பட்டார். அதற்குப் பிறகு இவர் துணை வேடங்களிலும் நடித்து வந்தார். இருந்தும் இவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

சனுஷா சந்தோஷ் படிப்பு:

பின் இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். அந்த வகையில் இவர் ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் யுனிவர்சிட்டியில் குளோபல் மெண்டல் ஹெல்த் அண்ட் சொசைட்டி மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் என்ற படிப்பை படித்து முடித்து இருக்கிறார். இரண்டு வ்ருடமாக இந்த படிப்பை படித்தார்.

சனுஷா சந்தோஷ் பதிவு:

தற்போது இவர் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். மேலும் இவரின் பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடந்து இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக இவர் தன்னுடன் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றும் போட்டிருக்கிறார். அதில் அவர், இரண்டு வருடங்களாகவே நான் வீட்டை ரொம்ப மிஸ் பண்ணினேன். அழுதது, தூக்கம் இல்லாமல் இருந்த நிறைய இரவுகள் இருந்தது. நிறைய பார்ட் டைம், ஃபுல் டைம் வேலைகள் செய்தேன்.

View this post on Instagram

A post shared by Sanusha Santhosh💫 (@sanusha_sanuuu)

படிப்பு குறித்து சொன்னது:

கடினமான வேலைகள் பண்ணேன். உடல் குறைவு, மன அழுத்தம் என அனைத்தையும் கடந்தேன். இது இரண்டு வருடங்களுக்குப் பிறகு கிடைத்த பலன். எனக்கு ஆதரவாக இருந்த என்னுடைய குடும்பத்திற்கு நன்றி. எனக்கு தேவைப்படும் போதெல்லாம் என்னுடன் இருந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இந்த வெற்றியை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன். எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் படித்த எம்.எஸ்.சி பட்டதாரி என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் சந்தோசமும் பெருமிதமும் அடைகிறேன் என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருக்கிறார். தற்போது இவருடைய பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full