புரட்சித்தலைவி அம்மாவின் படத்தில் கடைசி ஹீரோவாக சரத்பாபு நடித்த படம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் சரத்பாபு. இவர் 70களில் தொடங்கி 90களில் வரை தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக நடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் படங்களில் பணக்கார பையன், நண்பன் போன்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடத்தி மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.

இவர் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த பட்டினப்பிரவேசம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். அதற்கு பிறகு தமிழில் நிழல் நிஜமாகிறது என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிறமொழிப் படங்களில் நடித்து இருக்கிறார்.

Advertisement

சரத்பாபு திரைப்பயணம்:

மேலும், கமலஹாசன், ரஜினிகாந்த்துக்கு நண்பர் என்றாலே இவரைத்தான் பெரும்பாலும் போடுவார்கள். ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாமலை, முத்து, நெற்றிக்கண் போன்ற படங்களில் சரத் பாபு நடித்திருந்தார். இந்த படங்களில் இவருடைய நடிப்பு மக்கள் மத்தியில் பாராட்டப்பட்டிருந்தது. கடைசியாக இவர் தமிழில் வசந்த முல்லை என்ற படத்தில் நடித்திருந்தார். அதற்குப்பின் இவர் சின்னத்திரை சீரியல் நடித்திருந்தார்.

சரத் பாபு உடல்நிலை:

இப்படி இவர் கிட்டதட்ட 50 வருடங்களுக்கும் மேலாக 200 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். வாழ்வின் இறுதி கட்டத்தில் இவர் தமிழை விட தெலுங்கில் தான் அதிகமாக நடித்திருந்தார். தமிழில் இவர் கடைசியாக நடித்த படம் சிங்கம் 3. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக செப்சிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன் சிகிச்சை பலனின்றி சரத் பாபு காலமானார். அவருக்கு வயது 71.

Advertisement

சரத்பாபு இறப்பு:

இவரின் இறப்பிற்கு பல்வேறு பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் புரட்சித்தலைவி அம்மாவின் கடைசி ஹீரோவாக சரத்பாபு நடித்திருக்கும் படம் குறித்த தகவல் வைரலாகி வருகிறது. அதாவது, இவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கதாநாயகியாக நடித்த கடைசி படம் நதியை தேடி வந்த கடல். இந்த படத்தில் முதலில் ஹீரோவாக புக் செய்யப்பட்டது ரஜினியை தான்.

Advertisement

சரத்பாபு-ஜெயலலிதா நடித்த படம்:

ஆனால், அவர் கருப்பாக இருக்கிறார் என்று புரட்சித்தலைவி கூறியதால் தான் சரத்பாபு ஹீரோவானார். ஆரம்பத்தில் இந்த படத்தில் சரத்பாபு நடிக்க தயங்கினார். ஆனால், புரட்சித்தலைவி அழைத்து பேசிய பின்னர் தான் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு பிறகு தான் புரட்சித்தலைவியை புரட்சித்தலைவர் தேடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement