சரத்குமார்-சித்தார்த் கம்போவில் வெளிவந்த '3BHK' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 3BHK. இந்த படத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா, சைத்ரா ஜே. அச்சர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அம்ரித் இசையமைத்து இருக்கிறார். தினேஷ் பி கிருஷ்ணா, ஜிதின் ஆகியோர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்கள். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பாக அருண் விஷ்வா இந்த படத்தை தயாரித்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் நாயகன் சரத்குமார். சரத்குமாரின் மனைவி தேவையானி. இவர்களின் பிள்ளைகள் தான் சித்தார்த், மீதா. இவர்களை வாசுதேவன் அண்ட் ஃபேமிலி என்று சொல்வார்கள். இவர்களுடைய கனவே சொந்தமாக வீடு வாங்குவது தான். அதற்காக குடும்பமாக சேர்ந்து ரொம்பவே கடுமையாக உழைக்கிறார்கள். சித்தார்த்திற்க்கு சுத்தமாகவே படிப்பு ஏறவில்லை. தன்னுடைய பிள்ளைகளை எப்படியாவது படித்து பெரிய ஆளாக்க வேண்டும் என்றும் சொந்தமாக வீட்டை வாங்க வேண்டும் என்று சரத்குமார் அயராமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்.
பின் தான் சொந்த வீடு வாங்குவதற்கான பணத்தை சரத்குமார் சேர்த்து வைக்கிறார். அப்போது பன்னிரண்டாம் வகுப்பில் சித்தார்த் ஜஸ்ட் பாஸ் ஆகிறார். இதனால் நிறைய பணம் கொடுத்தால் தான் பொறியியல் கல்லூரியில் சீட்டு கிடைக்கும் என்று சொல்கிறார்கள். பின் சரத்குமார் வீடு வாங்க வைத்திருந்த பணத்தை சித்தார்த்தின் படிப்பு செலவிற்கு கட்டி விடுகிறார். அதற்குப்பின் முதலில் இருந்து சரத்துகுமார் பணம் சேர்த்து வைக்கிறார். சில வருடங்கள் ஓடுகிறது. பிறகு 15 லட்சமாக இருந்த வீடு இப்போது 25 லட்சமாக மாறிவிட்டது.
என்ன செய்வது என்று புரியாமல் சரத்குமார் தன்னுடைய தம்பியிடம் கடன் கேட்கிறார். ஆனால், அவரோ உன்னை நம்பி எப்படி பணம் தருவது. உன் மகன் நன்றாக படித்து கேம்பஸ் இன்டர்வியூரில் தேர்வாகிவிட்டால் அந்த பணத்தை நான் தருகிறேன் என்று சொல்கிறார். இதனால் வீட்டில் எல்லோருமே கேம்பஸ் இன்டர்வியூ சித்தார்த் செலக்ட் ஆக வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றம் தான் ஏற்படுகிறது.
சித்தார்த்தத்திற்கு வேலை கிடைக்கவில்லை என்று சரத்குமாருக்கு நெஞ்சு வலி வருகிறது. இதனால் அவருக்கு ஹாஸ்பிடலில் சேர்த்து சிகிச்சை கொடுக்கிறார்கள். சரத்குமார் சிகிச்சைக்காக சேர்த்து வைத்த மொத்த பணத்தையும் கொடுத்து விடுகிறார்கள். அதற்கு பின் மீண்டும் வீடு வாங்கும் கனவு
தவடிப்பொடி ஆகிறது. அதற்கு பின் தன்னுடைய மகளின் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அதற்கான பணத்தை சரத்குமார் சேர்த்து வைக்கிறார். இப்படி பல போராட்டங்கள் சரத்குமார் வாழ்க்கையில் வந்து கொண்டிருக்கிறது.
https://youtu.be/K5WZWYta-Ms?si=mwDZRbIdz8R0rX76
கடைசியில் சரத்குமார் சொந்தமாக வீடு வாங்கினாரா? சித்தாரத்திற்கு வேலை கிடைத்ததா? தன்னுடைய மகளின் கல்யாணத்தை நல்லபடியாக சரத்குமார் நடத்தி வைத்தாரா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை. இந்த படத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒரு யதார்த்தமான குடும்ப கதையை இயக்குனர் எடுத்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம். படத்தில் ஆக்சன், ரொமான்ஸ் எதுவுமே இல்லை என்றாலும் குடும்ப கதையை போரடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர். படத்திற்கு பலமே சரத்குமார் உடைய நடிப்பு என்று சொல்லலாம். இதுவரை பார்த்திராத கதாபாத்திரத்தில் சரத்குமார் மிரட்டி இருக்கிறார்.
படம் தொடக்கத்திலிருந்து இறுதிவரை எப்படியாவது சொந்த வீடு வாங்க வேண்டும் என்று சரத்குமார் போராடும் போராட்டம் பலருக்குமே கண் கலங்க வைக்கிறது. சில இடங்களில் அவருடைய எமோஷனல் காட்சிகள் கிளாப்ஸ்களை வாங்கி இருக்கிறது. இவரை அடுத்து படத்தில் வரும் தேவயானி தன்னுடைய அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். அதற்குப் பின் சித்தார்த் ஒரு மிடில் கிளாஸ் பையன் எப்படி எல்லாம் பிரச்சினைகளை சந்திக்கிறார் என்று தன்னுடைய நடிப்பின் மூலம் காண்பித்திருக்கிறார். மொத்தத்தில் இவர்கள் எல்லோருமே நடித்திருக்கிறார்கள் என்பதை விட வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம்.
படத்திற்கு மிடில் கிளாஸ் மனிதர்களுடைய கனவு அதை நோக்கி அவர்கள் போராடும் வாழ்க்கை, என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் சந்திக்கிறார்கள் என்பதையெல்லாம் இயக்குனர் சொல்லி இருக்கும் விதம் நன்றாக இருக்கிறது. படத்திற்கு பின்னணி இசை பெரிய பலமாக அமைந்திருக்கிறது. எடிட்டிங் அற்புதம். படம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை நிதானமாக சென்றாலும் இயக்குனர் அதை அழகாக காண்பித்திருக்கிறார். ஆனால், கொஞ்சம் நீளத்தை குறைத்திருக்கலாம். இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக சென்றிருக்கும். மொத்தத்தில் எல்லோரும் குடும்பமாக சேர்ந்து பார்க்கும் படமாக இருக்கிறது.
நிறை:
சரத்குமார், தேவயானி, சித்தார்த் நடிப்பு
கதைக்களம் அருமை
ஒளிப்பதிவு பின்னணி இசை நன்றாக இருக்கிறது
எடிட்டிங் சிறப்பு
எதார்த்தமான கதையை இயக்குனர் சொல்லி இருக்கும் விதம் சிறப்பு
குறை:
படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
படம் பொறுமையாக செல்கிறது
மொத்தத்தில் 3BHK - குடும்பங்கள் கொண்டாடும் படம்