சரத்குமார் நடிப்பில் வெளிவந்த 'ஆழி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

By subhashini · 27/2/2026

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சரத்குமார். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஆழி. இந்த படத்தை இயக்குனர் மாதேஷ் ராமதாசன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சஜித் கிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் இந்திரஜித்
ஜெகதீஷ், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி, சர்ஜின், மைதிலி சத்தியராஜ் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இன்று வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் ஹீரோ சரத்குமார் மீன்பிடி படகு மெக்கானிக்காக இருக்கிறார். இவர் இதை பகுதி நேரமாக செய்து கொண்டு போதைப்பொருள் விற்பனை, ஆயுதம் கடத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் இவருடைய மகள் தேவிகா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். இவர் தன்னுடன் பயிலும் மாணவர் இந்திரஜித்தை காதலிக்கிறார்.

பின் இவர்களுடைய காதல் விவகாரம் சரத்குமாருக்கு தெரிகிறது. கோபத்தில் சரத்குமார், இந்திரஜித்தை கடத்தி ஆழ்கடலுக்கு அழைத்து சென்று விடுகிறார். ஆழ்கடலில் வைத்து கொலை செய்ய சரத்குமார் திட்டம் போடுகிறார். அங்கிருந்து தப்பிக்க இந்திரஜித் முயற்சி செய்கிறார். பின் இந்திரஜித் தப்பித்தாரா? தேவிகா காதல் கைகூடியதா? சரத்குமார் மனம் மாறினாரா? என்பது தான் படத்தின் உடைய மீதி கதை.

படத்தில் சரத்குமார் பாசம், கோபம் என்ற இரு பரிமாணங்களில் தன்னுடைய நடிப்பில் மிரட்டி இருக்கிறார். ஆக்சன் காட்சிகளிலும் தூள் கிளப்பு இருக்கிறார் என்று சொல்லலாம். சரத்குமாருக்கு அப்பா வேடம் புதிது கிடையாது. இருந்தாலும் அதில் புதுமையை காட்ட முயற்சித்திருக்கிறார். வழக்கமான பாசக்கார அப்பாவை கொடூரமாக வில்லனாகவும் சரத்குமார் நடித்திருப்பது நன்றாக இருக்கிறது. இருந்தாலும் அதில் கொஞ்சம் வேறுபாட்டை காட்டி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

இவரை அடுத்து இந்திரஜித், தேவிகா இருவரும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்தினுடைய பெரும்பாலான காட்சிகள் ஆழ் கடலில் தான் எடுக்கப்பட்டிருக்கிறது.
சில காட்சிகள் கிராபிக்ஸ் செய்தாலும் அதில் இன்னும் கொஞ்சம் மெனக்கட்டு இருக்கலாம். சண்டைக் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். பின்னணி இசை ஓகே படத்தின் ஒளிப்பதிவு எடிட்டிங் நன்றாக இருக்கிறது.

கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் இன்னும் கொஞ்சம் சுவாரசியத்தையும் விறுவிறுப்பியும் காண்பித்திருக்கலாம். வழக்கமான ஒரு காதல் கதையை தான் இயக்குனர் கையாண்டு இருக்கிறார். ஆனால், வித்தியாசத்தை காட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். முதல் பாதி சுமாராக இருந்தாலும் இரண்டாம் பாதி மொக்கையாக சென்று இருக்கிறது. படத்தில் பல குறைகள் இருந்தாலும் சரத்குமார் உடைய நடிப்பு தான் கொஞ்சம் சமாதானப்படுத்துகிறது. மொத்தத்தில் ரொம்ப சுமாரான படமாக தான் இருக்கிறது.

நிறை:

சரத்குமார் நடிப்பு

பின்னணி இசை
காதல் கதை

முதல் பாதி ஓகே

மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒன்றும் இல்லை

குறை:

ஆங்காங்கே லாஜிக் குறைபாடுகள்

இரண்டாம் பாதி மொக்கை

கதைக்களத்தை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லி இருக்கலாம்

அழுத்தமான காட்சிகளை இன்னும் தெளிவாக விறுவிறுப்பாக காண்பித்திருக்கலாம்

மொத்தத்தில் ஆழி படம் - ஆழம் குறைவு

Tamil Behind Talkies AMP · Quick view
View full