ராதிகாவுக்கு ஏன் இத கொடுக்கல? ஆதங்கத்தில் மேடையிலேயே கொந்தளித்த சரத்குமார்- பின்னணி இது தான்

By subhashini · 2/5/2023

ராதிகாவிற்கு ஏன் இந்த விருது கொடுக்கவில்லை என்று மேடையிலேயே சரத்குமார் அப்செட் ஆகி பேசி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தென்னிந்திய சினிமா திரை உலகில் 90 காலகட்டங்களில் முன்னனி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் சரத்குமார். தற்போது இவர் அரசியல்வாதியாகவும் சிறந்து விளங்கி வருகிறார். சரத்குமார் அவர்கள் நடிகர், அரசியல்வாதி, இயக்குனர், தயாரிப்பாளர், பாடி பில்டர் என பன் முகங்களை கொண்டவர்.

இவர் இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் முன்னால் தென்னிந்தியத் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் ஆவார். மேலும், சரத்குமாரின் இரண்டாம் மனைவி தான் நடிகை ராதிகா. இது அனைவருக்கும் தெரிந்தது தான். தற்போது அனைவரும் எதிர்பார்த்து இருந்த பொன்னியின் செல்வன் 2 படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் சரத்குமார் பழுவேட்டையர் ரோலில் நடித்து இருக்கிறார்.

விழாவில் சரத்குமார்:

இதனை அடுத்து சில படங்களில் சரத்குமார் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் சரத்குமார் அவர்கள் திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர், ஒவ்வொருவருக்கும் ஒரு கதாபாத்திரம் அமையும் போது அதை மற்றொரு விஷயத்துடன் ஒப்பிட்டு பார்க்க முடியாது. ஆனால், நான் இந்த மேடையில் சொல்கிறேன். இன்றைக்கு இருக்கிற கதாநாயகிகளில் சிறந்த நடிகை என்றால் அது என்னுடைய மனைவி ராதிகா தான் என்று சொல்வேன்.

ராதிகா குறித்து சொன்னது:

ராதிகா இந்திய சினிமா துறையில் ஒரு தலைசிறந்த நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். ஆனால், இன்று வரை அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது தரவில்லை. இதை இந்த தருணத்தில் ஏன்? என்று நான் கேட்கிறேன். அதேபோல் வரலக்ஷிமியை பற்றி சொல்ல வேண்டுமானால் அவர் தன்னை தயார் செய்து கொண்டு வருகிறார். அவர் புதுப்புது வித்தியாசமான பாதையில் பயணிக்கிறார். சினிமாவை முழுமையாக படித்துவிட்டு தான் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சரத்குமார் நடிக்கும் படம்:

தற்போது நான் வெங்கட் பிரபு மற்றும் அரவிந்த் சாமியுடன் இணைந்து படம் பண்ணுகிறேன். தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர் வெங்கட் பிரபு. என்னுடைய நெருங்கிய நண்பர் அரவிந்த்சாமி. எனக்கும் ராதிகாவிற்கும் திருமணம் நடந்தபோது வாழ்த்துக்களை படித்து திருமணத்தை நடத்தி வைத்தவரே அரவிந்த்சாமி தான். அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய சந்தோஷம் என்று கூறியிருக்கிறார்.

ராதிகா திரைப்பயணம்:

தமிழ் சினிமாவில் 80, 90ஸ் கால கட்டத்தில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ராதிகா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் முதல் தொடங்கி தற்போது இருக்கும் சூர்யா, விஷால், விஜய், விஜய் சேதுபதி என்று பல்வேறு நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார். மேலும், சினிமாவை தாண்டி சின்னத்திரையில் கலக்கி வருகிறார் ராதிகா. தற்போது இவர் பல படங்களில் பிசியாக நடித்து கொண்டு வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full