'கேட்டுச்சா சரத்குமார்' - ரஜினி பிறந்தநாளில் வரலட்சுமி போட்ட பதிவால் சரத்குமாரை கலாய்க்கும் ரஜினி ரசிகர்கள்.

By subhashini · 12/12/2023

சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்தநாளுக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் பதிவிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அன்றும் இன்றும் என்றும் கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் விமர்சன ரீதியாகவும் வெற்றியடைந்து இருக்கிறது.

மேலும், இன்று ரஜினிகாந்த் உடைய 73 வது பிறந்தநாள். இதை ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்திய சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலருமே நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக நடிகை வரலட்சுமி சரத்குமார் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், ஹாப்பி பர்த்டே ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் என்று கூறியிருக்கிறார்.

சரத்குமார் சர்ச்சை பேச்சு:

இதை பார்த்த நெட்டிசன்கள் பலருமே இவருடைய தந்தை சரத்குமார் பேசிய சூப்பர் ஸ்டார் பட்டம் சர்ச்சை தான் ட்ரோல் செய்து வருகின்றனர். அதாவது, சமீபத்தில் வெளிவந்த விஜயின் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று சரத்குமார் மேடையிலேயே பேசி இருந்தார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது. அதனை தொடர்ந்து தான் விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் ரசிகர்கள் பேச ஆரம்பித்தார்கள்.

சூப்பர் ஸ்டார் சர்ச்சை:

இதனால் கோலிவுட் வட்டாரத்தில் சில மாதங்கள் கலவர பூமியாகவே இருந்தது. சிலர் ரஜினிக்கு ஆதரவாகவும், சிலர் விஜய்க்கு ஆதரவாகவும் குரல் கொடுத்திருந்தார்கள். தற்போது தான் அந்தப் பிரச்சினை ஓய்ந்து முடிந்து இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் போட்ட பதிவில் ஒரே சூப்பர் ஸ்டார் நீங்கள் தான் என்று ரஜினியை குறிப்பிட்டு போட்டு இருக்கிறார்.

நெட்டிசன்கள் விமர்சனம்:

தற்போது இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலருமே, சரத்குமாரை கலாய்த்தும், உங்க அப்பன் இன்சைட் என்று கிண்டலடித்தும் வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் சரத்குமார் பேட்டியில், 2026 இல் நான் தான் முதல்வர் என்றும், மாமியார் ஆசைப்பட்டார் என்றும் பேசி இருந்தார். இதையும் வைத்து இவர்கள் மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகிறார்கள். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகியிருந்த படம் ஜெயிலர்.

ரஜினி திரைப்பயணம்:

இந்த படம் உலக அளவில் மிகப் பெரிய அளவில் வசூல் சாதனை செய்திருந்தது. இந்தப் படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக்கி இருக்கும் படம் லால் சலாம். இந்த படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கி இருக்கிறார். கூடிய விரைவில் இந்த படம் வெளியாகயிருக்கிறது. இதனை அடுத்து நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்க இருக்கிறார். தற்போது அந்த படத்தில் காண வேலைகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை லோகேஷ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

behindtalkies AMP · Quick view
View full