மைனா நந்தினி என்று நினைத்து ஆணுக்கு வந்த தொல்லை. போலீசில் புகார் கொடுத்த சரத்குமார் கட்சி நிர்வாகி.

By Rajkumar · 23/2/2020

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சரவணன் மீனாட்சி நெடுந்தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மைனா நந்தினி. நடிகை நந்தினி சின்னத்திரையில் மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை படத்தில் மைனா நந்தினி நடித்திருந்தார். சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடந்து முடிந்தது. தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் அரண்மனைக்கிளி என்ற தொடரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மைனா நந்தினி பெயரில் போலி முகநூல் உருவாக்கி அதில் குருநாதன் என்பவரின் மொபைல் நம்பரை பதிவிட்டு உள்ளார்கள். இதனால் தினமும் குருநாதனை இரவு நேரங்களில் போன் செய்து அவதூறாக பேசியதாக போலீசில் புகார் அளித்து உள்ளார் குருநாதன். தற்போது இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அண்ணாமடுவை சேர்ந்தவர் குருநாதன். இவர் சமத்துவ மக்கள் கட்சியில் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளராக உள்ளார். நடிகை மைனா நந்தினி என்ற பெயரில் போலி முகநூல் கணக்கை உருவாக்கி அதில் குருநாதனின் செல்ஃபோன் நம்பரை இணைத்து உள்ளார்கள்.

இதையும் பாருங்க : விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடலை தெலுங்கில் பாடப்போகும் பிரபல நடிகர்.வேற லெவல் மாஸ்

இதனால் முகநூலில் இருக்கும் போன் நம்பரை சீரியல் நடிகை மைனா நந்தினி என நினைத்து தினமும் இரவு நேரங்களில் பல வாலிபர்கள் குருநாதனை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் குருநாதனுக்கு போன் செய்து நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க, உங்களை நேரில் பார்க்க வேண்டும். உங்களுடைய முகவ்ரி சொல்லுங்கள் என்றும் கேட்டு உள்ளார்கள். மேலும், அந்நபர்கள் சில நேரங்களில் தகாத வார்த்தைகளால் அவதூறாக குருநாதன் அவர்களை பேசி உள்ளார்கள். இதனால் குருநாதன் அவர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

அதோடு இரவு நேரங்களில் செல்போனில் இருந்து அழைப்புகள் வந்தாலே குருநாதன் மிகவும் பயப்படுகிற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக குருநாதன் கூறுகிறார். ஆகையால், இது குறித்து குருநாதன் அவர்கள் அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார். அந்த புகாரில் குருநாதன் கூறியிருப்பது, ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நடிகை மைனா நந்தினி பெயரில் இருக்கும் போலி முகநூல் கணக்கை முடக்கி என்னுடைய செல்போன் எண்ணை நீக்க வேண்டும். நடிகை பெயரில் இருக்கும் போலி ஃபேஸ்புக் கணக்கில் தனது செல்போன் எண் இணைக்கப்பட்டிருப்பதால் இரவு தூக்கத்தைத் தொலைத்து நிற்கிறேன் என்று சமத்துவ மக்கள் கட்சி வடக்கு மாவட்டச் செயலாளர் குருநாதன் கூறியுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full