சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்கில் நடித்தது தொடர்பாக நடிகர் சரத்குமார் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இறுதிச்சுற்று புகழ் சுதா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சூரரைப்போற்று திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா நடித்து இருந்தார். இந்த படத்தில் இவர்களுடன் ஜாக்கி ஷெராப், ஊர்வசி உட்பட பலர் நடித்து இருந்தனர்.

நிக்கேத் பொம்மி ரெட்டி அவர்கள் இந்த படத்திற்கு ஒளிப்பதிவுசெய்து இருந்தார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் சிக்கியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருந்தது. கொரோனா பிரச்சனை காரணமாக இந்த படம் அமேசான் பிரேமில் வெளியாகி இருந்தது. இது ஏர் டெக்கான் உரிமையாளர் ஜி ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை இன்ஸ்பயர் ஆகி எடுத்த படம். சினிமாவுக்கான சில விஷயங்களைச் சேர்த்து இந்த கதையை உருவாக்கி இருந்தனர்.

Advertisement

சூரரைப் போற்று படம்:

சுவாரஸ்யமான திரைக்கதையுடன், நடிகர்களின் சிறப்பான நடிப்புடன் இந்த படம் வெளியாகி இருந்ததால் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. அதோடு 68 ஆவது தேசிய திரைப்பட விருதில் 5 பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை வென்று குவித்தது சூரரைப்போற்று திரைப்படம். இதற்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் பாராட்டி வருகிறார்கள். இதை அடுத்து இந்த படத்தை இந்தியில் ரீ – மேக் செய்வதாக இயக்குனர் சுதா அவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஹிந்தியில் அக்ஷய் குமாரை ஹீரோவாக நடித்து இருக்கிறார். இந்த படத்திற்கு ‘சர்ஃபிரா’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. வருகிற ஜூலை 12-ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.

சர்ஃபிரா படம்:

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் சூர்யாவும் ஒரு கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியாகி இருந்தது. அதில் சரத்குமார் வந்திருக்கிறார். தமிழில் மோகன் பாபு நடித்த கதாபாத்திரத்தில் தான் ஹிந்தியில் சரத்குமார் நடித்து இருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் சரத்குமார், விமான பயணம் என்பது எல்லோருக்கும் ஆனது என்பதை மாற்ற கேப்டன் கோபிநாத் எடுத்த முடிவு அபாரமானது. அவருடைய வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட சூரரைப் போற்று படம் ரொம்ப பிரமாதமாக இருந்தது.

Advertisement

சரத்குமார் பேட்டி:

அதற்கான அங்கீகாரமும் அவர்களுக்கு கிடைத்தது. இதில் என்னுடைய கதாபாத்திரமும் கேமியோ மாதிரி தான். இத்தனை வருஷத்தில் இதுதான் என்னுடைய முதல் இந்தி படம். நல்ல எக்ஸ்போஷர் எனக்கு கிடைத்திருக்கிறது. சுதாவுடன் ஒர்க் பண்ணது ரொம்ப நன்றாக இருக்கிறது. ஒரு மொழியில் முதன் முதலில் நடிக்க போது எப்படி வரும் என்ற பயம் இருக்கும். ஆனால், சூரரை போற்று மாதிரி ஒரு சூப்பர் ஹிட் படம் வரும்போது அந்த விஷயங்கள் எல்லாம் மறந்துவிட்டது. என்னுடைய கதாபாத்திரம் ரொம்ப நன்றாக இருக்கிறது. இந்தி ஆடியன்ஸுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.

Advertisement

பட அனுபவம்:

நான் நடித்த சூரியவம்சம், நாட்டாமை போன்ற படங்கள் எல்லாம் தமிழில் சூப்பர் ஹிட் ஆனவுடன் ஹிந்தியில் ரீமேக் பண்ணியிருக்கிறார்கள். அப்போது இந்த அளவுக்கு புரமோஷன் எல்லாம் கிடையாது. அதெல்லாம் பண்ணி இருந்தால் நான் அப்பவே ஹிந்தியில் பிரபலமான நடிகராக இருந்திருப்பேன். அக்ஷய் குமார் ரொம்ப திறமையான நடிகர். என்னைப் போலவே ஃபிட்னஸ் ஃப்ரீக் கொண்டவர். நான் நடித்த கதாபாத்திரத்தை வேற யாரை வைத்து வேணாலும் எடுத்திருக்கலாம். ஆனால், நான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குனர் சுதா, தயாரிப்பாளரான சூர்யா- ஜோதிகா எல்லோருமே என்னை அழைத்ததற்கு ரொம்ப நன்றி என்று பேசியிருக்கிறார்.

Advertisement