தமிழ் சினிமாவில் 80, 90 கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் நடிகை ராதிகா . இவர் தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் முதல் தற்போது இருக்கும் சூர்யா, விஷால், விஜய், விஜய் சேதுபதி என்று பல்வேறு நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்குறார். சினிமாவை தாண்டி சின்னத்திரையில் கலக்கி வருகிறார் ராதிகா. நடிகை ராதிகா அவர்களின் முதல் கணவர் பிரபல இயக்குனரும் நடிகருமான நடிகர் பிரத்தாப். இவரை 1985 ஆம் ஆண்டு ராதிகா திருமணம் செய்து கொண்டார்.

பின் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் ஆன ஒரே ஆண்டில் இவர்கள் விவாகரத்து செய்து கொண்டார்கள்.அதன் பின்னர் ராதிகா லண்டனை சேர்ந்த ரிச்சர்ட் ஹார்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ரேயான் என்ற மகளும் பிறந்தார். பின் ராதிகா அவர்கள் ரிச்சர்ட்டிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். பிறகு தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருக்கும் நடிகர் சரத்குமாரை கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

மேலும், நடிகர் சரத்குமாருக்கு ஏற்கனவே முதல் திருமணம் ஆகி விவாகரத்து பெற்றார்.மேலும், சரத்குமாரின் முதல் மனைவிக்கு வரலக்ஷ்மி மற்றும் பூஜா என்று இரண்டு மகள்கள் இருக்கின்றனர். மேலும், சரத்குமார் ராதிகாவுக்கு ஒரு மகனும் இருக்கிறார். அவ்ருடைய பெயர் ராகுல். மேலும், சரத்குமாருக்கு ஒரு சகோதரரும் இருக்கிறார்.

ஆம், சரத்குமாரின் சகோதரர் மகன் ராம்குமார் ஹீரோவாக அறிமுகமாகிறாராம். அதுவும் இந்த படத்தில் தனது சகோதரி வரலக்ஷ்மியும் நடிக்கிறாராம். அந்த படத்தின் பெயர் ‘கலர்ஸ்’. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisement
Advertisement