துரோகத்தால் எல்லாத்தையும் இழந்தேன், ஆனால் - கண்கலங்கி நடிகர் சரவணன் பகிர்ந்த விஷயம்
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சரவணன். இவர் 1991ம் ஆண்டு வெளியான வைதேகி வந்தாச்சு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகத்திற்கு அறிமுகமாகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். அதன் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. இருந்தாலுமே இவரால் கடைசி வரை ஹீரோவாக நடிக்க முடியவில்லை. அதற்குப்பின் வாய்ப்புகள் குறைந்த உடன் குணசித்திர வேடங்களில் சரவணன் நடித்து வந்தார்.
பின் இடையில் இவர் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டார். பின் இயக்குனர் அமீரின் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த பருத்திவீரன் படத்தின் மூலம் சித்தப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. இதிலிருந்து இவரை சித்தப்பு சரவணன் என்று தான் எல்லோருமே அழைக்கிறார்கள். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் குணசித்திர வேடங்களில் மிரட்டிக்கொண்டு வருகிறார்.
சரவணன் குறித்த தகவல்:
அதன் பின் சரவணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியில் இவர் பேசிய சில சர்ச்சை கருத்தால் திடீரென்று வெளியேற்றப்பட்டிருந்தார். அதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் கதாநாயகியின் தந்தையாக சரவணன் நடித்திருந்தார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் சட்டமும் நீதியும் என்ற படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் சரவணன் உடைய நடிப்பு மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இவர் படங்களில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
சரவணன் பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் நடிகர் சரவணன் அவர்கள் தன்னுடைய சொந்த ஊரான சேலம் மாவட்டத்தில் ஓமலூர் வட்டம் வட்டக்காடு என்ற ஊரில் ஒரு விநாயகர் கோயிலை கட்டியிருக்கிறார். இவருடைய தோட்டத்தில் தான் இந்த விநாயகர் கண்டெடுக்கப்பட்டது. தற்போது அதற்கு ஒரு ஆலயம் கட்டி இருக்கிறார். இந்த கோயில் உடைய மகா கும்பாபிஷேக விழாவும் நடைபெற்று இருந்தது. மேலும், இது தொடர்பாக அளித்த பேட்டியில் சரவணன், நான் சினிமாவில் உச்சத்தில் இருந்து அதற்கு பின் இடையில் இடைவெளி எடுத்து மீண்டும் நடிக்க வந்தேன். இடையில் நான் கீழே விழுவேன் என்று எனக்கு தெரியும்.
https://www.youtube.com/watch?v=AYglTfknTnE
வாழ்க்கையில் பட்ட கஷ்டம்:
இதெல்லாம் கட்டத்தில் இருக்கிறது. ஜாதகம், கடவுளை நம்புபவர்களுக்கு இது புரியும். சினிமாவில் உச்சத்துக்கு போனேன். இடையில் கீழே அடி பாதாளத்திற்கு விழுந்தேன். அது என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாது. யாரும் கை கொடுத்து உதவவில்லை. அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, நண்பர்கள் என்று யாருமே எனக்கு உதவவில்லை. நிறைய துரோகத்தை சந்தித்தேன். நான் யாரிடமும் உதவி கேட்டு போனதே இல்லை. பட வாய்ப்பு கூட கேட்டு நான் நிக்க மாட்டேன். என்னுடைய ஹீரோ வாய்ப்பு கூட அப்படி தான். நான் ரஜினி சாரோட ரசிகர் என்பதால் லோகேஷுக்கு அவருடைய படத்தில் நடிக்க ஒரு மெசேஜ் போட்டேன் என்று கூறியிருக்கிறார்.