12 கிலோ எடை குறைப்பு, 13 வருட இடைவெளி - மீண்டும் சீரியலுக்கு வந்த 'சரவணன் மீனாட்சி' நடிகர் இர்ஃபான்
90ஸ் குழந்தைகளின் பேவரைட் சீரியல் கனா காணும் காலங்கள். இந்த சீரியலில் ஹீரோவாக நடித்தவர் இர்பான். இந்த சீரியல் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இதனை தொடர்ந்து இர்பான் ‘சரவணன் மீனாட்சி ‘ தொடரில் நடித்து சின்னத்திரையில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதன் பிறகு இர்பான் அவர்கள் சீரியலை விட்டு சினிமாவுக்கு வந்து விட்டார். இவர் பட்டாளம், எதிர் வீடு, ரூ, பொங்கி எழு மனோகரா போன்ற பல படங்களில் நடித்து வந்தார்.
இதில் எந்த படமும் அவருக்கு பெரியதாக அமையவில்லை. கடைசியாக இவர் சினிமாவில் பிரபலமான இயக்குனரும், நடிகருமான சேரன் இயக்கத்தில் வெளிவந்த “ராஜாவுக்கு செக்” படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். இந்த படத்தை சேரன் அவர்கள் இயக்கி நடித்து இருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. மேலும், இர்பானுக்கு சரியாக பட வாய்ப்புகள் வரவில்லை. அதன் பின் இவர் விஜய் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ வெப்சீரிஸ்ஸில் நடித்து இருந்தார்.
இர்பான் குறித்த தகவல்:
ஒன்பது ஆண்டுகள் கழித்து இர்பான் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார். அதற்கு பிறகு இவருடைய நடிப்பில் எந்த படங்களுமே வரவில்லை. அதன் பின் இவர் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது நடிகர் இர்பான் அவர்கள் புதிய சீரியல் ஒன்று கமிட்டாகி இருக்கிறார். இந்த சீரியல் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் இர்பான், சீரியலில் நடிக்க சொல்லி தொடர்ந்து கேட்டுக் கொண்டுதான் இருந்தார்கள்.
இர்பான் பேட்டி:
நான்தான் மறுத்து வந்தேன். இந்த கதை ரொம்பவே பிடித்திருந்தது. பெரிய சேனலில் பிரைம் டைமில் ஒளிபரப்பாக இருக்கிறது. இடைவெளியில் கொஞ்சம் வெயிட் போட்டதால் இந்த சீரியலுக்காக 12 கிலோ எடை குறைத்து இருக்கிறேன். ரொம்ப நாள் கழித்து வந்தாலும் நான் நடித்திருந்த பார்த்தால் ஆடியன்ஸ் சட்டுனு அடையாளம் கண்டு கொள்வார்கள். ப்ரோமோ வெளியானதுமே ஏகப்பட்ட விசாரிப்புகள் வந்தது. 2k கிட்ஸ் தான் நான் கொஞ்சம் புதுசு.
சீரியல் நடிக்க காரணம்:
கண்டிப்பாக அவர்களுக்கு நான் தெரிவேன் என்று நினைக்கிறேன். அவர்களை சீரியலுக்குள் இழுத்துட்டா போதும் அது பண்ணிடலாம். மற்றபடி தொடரில் ஹீரோயினியா பவித்ரா நடிக்கிறார். சரவணன் மீனாட்சியில் எனக்கு பாட்டியாக நடித்த குயிலி மேடம் வருகிறார்கள். இன்னும் நிறைய பேர் நடிக்கிறார்கள். சூட்டிங் தொடங்கி சென்று கொண்டிருக்கின்றது. இந்த மாத கடைசியில் ஒளிபரப்பாக தொடங்கும் என்று கூறி இருக்கிறார்.