சரவணன் மீனாட்சி சீரியலின் ஏலேலோ Title பாடலை போட்டது யார் தெரியுமா ? தன் மனைவிடம் Bet கட்டி வென்ற செந்தில்.

By subhashini · 12/10/2022

சரவணன் மீனாட்சி சீரியலின் ஏலேலோ பாடலை இசைத்தவர் குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவி சீரியலுக்கு என்றே பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களெல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்த சீரியலில் ஒன்று சரவணன் மீனாட்சி. இந்த தொடரில் நாயகனாக நடித்தவர் செந்தில்.

இந்த தொடரின் மூலம் செந்தில் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். இவர் முதன் முதலாக ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜே வாக தான் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். அதன் பின் இவர் தவமாய் தவமிருந்து, செங்காத்து பூமியிலே, கண்பேசும் வார்த்தைகள், வெண்ணிலா வீடு போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார். ஆனால், சினிமாவில் இவருக்கு பெரிய படங்களில் மக்கள் மத்தியில் ரீச் கிடைக்காததால் மீண்டும் சின்னத் திரை நோக்கிய பயணம் செய்ய தொடங்கினார்.

ஸ்ரீஜா- செந்தில் திருமணம் :

சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த போதே செந்தில் ஸ்ரீஜாவிற்கு காதல் மலர்ந்தது. பின் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் மீண்டும் இவர் தன் மனைவியுடன் இணைந்து ‘மாப்பிள்ளை’ என்ற தொடரில் நடித்தார். அதுவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு பின் செந்தில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் நடித்து இருந்தார்.

செந்தில் நடித்த சீரியல்கள்:

பின் இந்த தொடர் கொரோனா காரணமாக முடித்து இருந்தார்கள். அதன் பின் நாம் இருவர் நமக்கு இருவர் 2 என்ற புது கதைக்களத்துடன் சீரியல் ஒளிபரப்பாகி இருந்தது. இந்த சீரியலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. சமீபத்தில் தான் இந்த தொடர் வெற்றிகரமாக முடிவடைந்தது. இது ஒரு பக்கம் இருக்க, திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகியும் செந்தில் – ஸ்ரீஜா தம்பதி குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்து வந்தார்கள்.

View this post on Instagram

A post shared by Vijay Tv updates (@vijaytvglitz)

செந்தில்-ஸ்ரீஜா குழந்தை:

இப்படி ஒரு நிலையில் ஸ்ரீஜா கர்ப்பமாக இருந்தார். சமீபத்தில் ஸ்ரீஜாவின் வளைகாப்பு விழா நடைபெற்று இருக்கிறது. அதன் போட்டோக்களை செந்தில் இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியாக பகிர்ந்து இருந்தார். தற்போது இவர்கள் இருவருக்கும் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த நிலையில் செந்தில்குமாரின் பழைய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, செந்தில்குமார்- ஸ்ரீஜா நடித்த சரவணன் மீனாட்சி சீரியலில் ஏலேலோ என்ற பாடல் வரும்.

செந்தில் வெளியிட்ட வீடியோ:

இந்த சீரியலின் ஹிட்டுக்கு இந்த பாடலும் ஒரு காரணம் என்று சொல்லலாம். இந்த பாடலை இசைத்தவர் யார் என்று செந்தில் தன்னுடைய மனைவி ஸ்ரீஜாவிடம் கேட்கிறார். அவர் உடனே, இளையவன் என்று கூறுகிறார். அதற்கு செந்தில், தவறு எங்கேயும் எப்போதும், கோவா போன்ற படத்தில் பணியாற்றிய சத்யா தான் ஏலேலோ இசைத்தவர் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full