இந்தம்மா ஹாலிவுட்லயா இருக்கு, ஓவர் சீன் - ரஷிதா பதிவிட்ட புகைப்படத்தை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.

By Rajkumar · 24/5/2020

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எத்தனையோ சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுவிடுகிறது. அந்த வகையில் இதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. சினிமாவில் தான் நான் முதல் பாகம் இரண்டாம் பாகம் என்று பார்த்திருப்போம். ஆனால், சீரியலில் பல பாகங்களை கண்ட சீரியல் என்றால் அது விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் தான். இந்த தொடர் மூலம் ரசிகர்களும் பரிட்சயமானவர் நடிகை ரக்ஷிதா.

இந்த தொடரில் எத்தனையோ சரவணன் கதாபாத்திரம் மாறினாலும் இறுதி வரை இவர் மட்டுமே மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த சீரியலில் கிடைத்த புகழால் ரசிதாவிற்கு சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது. மேலும், 2015 ஆம் ஆண்டு வெளியான 'உப்பு கருவாடு ' என்ற திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் ரஷிதா.

சரவணன் மீனாட்சி தொடருக்காக நடிகை ரஷிதா சிறந்த நடிகை என்ற விருதை பல முறை பெற்றுள்ளார். அந்த வகையில் எத்தனை சரவணன் மீனாட்சி வந்தாலும் நான் தான் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்று விருது மேடையில் கொஞ்சம் திமிராகவே பேசி இருந்தார் ரஷிதா.ஆனால், அதன் பின்னர் விஜய் டிவியின் ஒரு தொடரில் கூட இவரை காண முடியவில்லை.

தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நாச்சியார் புரம்' என்ற தொடரில் நடித்து வருகிறார். சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் லெக்கின்ஸ் பேன்ட் போட்டுக்கொண்டு புடவை கட்டியுள்ள அவரது புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் என்ன கன்றாவி ட்ரெஸ் இது என்று கழுவி ஊற்றி வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full