வித்தியாசமான காதல் பாணியில் வெளிவந்த 'சரீரம்' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
இயக்குனர் ஜி.வி பெருமாள் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் சரீரம். இந்த படத்தில் தர்ஷன் ப்ரியன், சர்மி விஜயலட்சுமி, மனோஜ், புதுப்பேட்டை சுரேஷ், மதுமிதா, ஜிவி பெருமாள், சகிலா உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு பாரதிராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை ஜி.வி பெருமாளே தயாரித்தும் இருக்கிறார். வித்தியாசமான காதல் பாணியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் ஹீரோ தர்ஷன் கல்லூரி படித்துக் கொண்டிருக்கிறார். அதே கல்லூரியில் தான் ஹீரோயினி ஷர்மியும் படித்துக் கொண்டிருக்கிறார். இருவருமே ஒருவரைக்கு ஒருவர் காதலிக்கிறார்கள்.
இவர்களுடைய காதல் இருவீட்டாருக்குமே தெரிய வருகிறது. அப்போது கதாநாயகியோட குடும்பத்தார் ஹீரோவை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். அவர்களிடமிருந்து எப்படியாவது தப்பித்து உயிருடன் வாழ வேண்டும் நினைக்கிறார்கள்.
அதோடு காதலர்கள் யாரும் யோசித்து கூட பார்க்க முடியாத அளவிற்கு ஒரு விஷயத்தை ஹீரோ-ஹீரோயின் செய்கிறார்கள். அது என்ன? அதன் மூலம் அவர்களுடைய காதல் வாழ்க்கை என்ன ஆனது? இருவரும் சேர்ந்தார்களா? இல்லை பிரிந்தார்களா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை. படத்தில் ஹீரோ தர்ஷன் பிரியன் உடைய நடிப்பு, ஆக்சன், நடனம் என்று அனைத்திலுமே ஸ்கோர் செய்திருக்கிறார். காதலுக்காகவும் காதலிக்காகவும் எதையும் செய்யலாம் என்பதை ஹீரோ சிறப்பாக காண்பித்து இருக்கிறார்.
காதலுக்காக அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், வலிகள் என அனைத்தையுமே தன்னுடைய நடிப்பின் மூலம் ஹீரோ காண்பித்திருக்கிறார். இவரை அடுத்து கதாநாயகி சர்மி விஜயலட்சுமி எளிமையாக தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார். ஹீரோவுக்கு இணையாக இவருடைய கதாபாத்திரமும் சிறப்பாக இருக்கிறது. இவர்களை அடுத்து படத்தில் வரும் எல்லா கதாபாத்திரங்களுமே நன்றாக நடித்து இருக்கிறார்கள்.
இருந்தாலும் அனைவரும் புதுமுகம் என்பதால் பார்வையாளர்கள் மத்தியில் கவர தாமதம் ஆகிறது.
வழக்கமான காதல் கதை தான் இருந்தாலும் அதை இயக்குனர் கொஞ்சம் வித்தியாசமாக கொடுக்க முயற்சித்து இருக்கிறார். படம் ஆரம்பத்தில் மெதுவாக சென்றாலும் இறுதியில் நல்ல ஒரு கிளைமாக்ஸை கொடுத்திருக்கிறார். இசையமைப்பாளர் பாரதிராஜா தன்னுடைய இசையின் மூலம் பின்னி பெடல் எடுத்திருக்கிறார். படத்தில் ஒளிப்பதிவு எடிட்டிங் எல்லாம் நன்றாக இருக்கிறது.
காதல் கதையில் இதுவரை யாரும் கையாலாத ஒரு வித்தியாசமான முயற்சியை இயக்குனர் எடுத்திருக்கிறார். காதல் கதை மட்டுமில்லாமல் வேறு பாலினத்தவருடைய வலிகளையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையையும் இயக்குனர் சொல்லி இருப்பது நன்றாக இருக்கிறது. இது இயற்கைக்கு எதிராக இருந்தாலும் விபரீதமானது என்பதையும் காண்பித்திருக்கிறார்கள். ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள். இருந்தாலும் அதை தவிர்த்து பார்த்தால் எல்லோரும் சென்று ஒரு முறை பார்க்கும் படமாக தான் இருக்கிறது.
நிறை:
நடிகர்கள் நடிப்பு
வித்தியாசமான காதல் கதை
பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம்
கிளைமாக்ஸ் நன்றாக இருக்கிறது
குறை:
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
புதுமுக நடிகர்கள்
ஆரம்பத்தில் கதை பொறுமையாக செல்கிறது
மொத்தத்தில் சரீரம் - வித்தியாசமான காதல் முயற்சி