தேவா சார் கையெழுத்து என் தலையெழுத்தாக மாறும்னு நினைக்கல - 'சரிகமப' அபினேஷ் எஸ்க்குளூசிவ்

By subhashini · 4/6/2025

பாடகர் தேவா பற்றி சரிகமப அபினேஷ் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் தொலைக்காட்சிகளில் பல்வேறு விதமான பாடல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பாடல் நிகழ்ச்சி தான் சரிகமப. இந்த பாடல் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல பாடகர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகளும் கிடைத்து இருக்கிறது.

அர்ச்சனா தான் இந்த நிகழ்ச்சியை பல வருடமாக தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்ற இரண்டு பிரிவுகளில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சியின் ஜூனியர் கான சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி நடைபெற்றது. சில வாரங்களுக்கு முன் தான் இந்த நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது.

சரிகமப நிகழ்ச்சி :

இந்த நிகழ்ச்சியின் உடைய இறுதிச் சுற்றுக்கு 6 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். இதில் திவினேஷ் தான் டைட்டில் பட்டத்தை வென்றிருந்தார். இவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் இவருக்கு மெல்லிசை இளவரசன் என்ற பட்டமும் கொடுத்தார்கள். இவரை அடுத்து இரண்டாவது இடத்தை யோகஸ்ரீ மற்றும் மூன்றாவது இடத்தை ஹேமித்ரா பிடித்திருந்தார்கள்.

அபினேஷ் குறித்த தகவல்:

மேலும், பைனலுக்கு சென்ற ஆறு போட்டியாளர்களின் ஒருவர் தான் அபினேஷ். இவரும் நிகழ்ச்சியில் மிகச் சிறப்பாக பாடி இருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் அபினேஷ், நான் சரிகமப நிகழ்ச்சியின் செட்டை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். பைனல் முடிந்ததுமே அடுத்த நாள் எந்த பாடலை தேர்ந்தெடுக்கலாம் என்ற விஷயம் தான் நினைவுக்கு வருகிறது. நான் சும்மா வீட்டில் ஹம் பண்ணுவேன்.

https://www.youtube.com/watch?v=v7EKhWRGehc

அபினேஷ் பேட்டி:

அப்போ என்னுடைய குரல் நல்லா இருக்கு என்று என்னுடைய அம்மா தான் என்னை பாட்டு கிளாசில் சேர்த்து விட்டார். சொல்லப்போனால் எனக்கு பாடணும் என்ற ஆசை என் பாட்டியிடம் தான் வந்தது. நடுவர்கள் இதை எப்போதுமே ஊக்கப்படுத்திக் கொண்டுதான் இருந்தார்கள். நான் ஒரு வாரம் சரியாக பாடவில்லை என்றாலும் அடுத்த வாரம் சரியாக பாடுவதற்கு எனக்கு ஊக்கத்தை கொடுத்தார்கள். எஸ்பிபி சரண் சார் என்னுடைய குரலுக்கு செட் ஆகுற மாதிரி பாடல்களை தான் கொடுப்பார்.

தேவா பற்றி சொன்னது:

ஒரு பிரெண்டு மாதிரி எஸ்பிபி சரண் சார் ஜாலியாக இருப்பார். முக்கியமாக ஸ்வேதா மேம் கூட நான் சேர்ந்து பாடினது ஜாலியாக இருந்தது. எனக்கு ரகுமான் சாரோட 90ஸ் பாடல்கள் எல்லாம் ரொம்ப பிடிக்கும். இப்போ பைனான்ஸ்க்கு முன்னாடி தேவா சார் பாராட்டி இருந்தார். அவர் கையெழுத்து போட்டுக் கொடுத்த கீபோர்டை நான் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன். அந்த கீபோர்டு வைத்து நான் மியூசிக் டைரக்டர் ஆகணும் என்று வாழ்த்தினார். அவருடைய கையெழுத்து என் தலையெழுத்தை மாற்றும் என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full