தன்னுடைய தந்தைக்கு சரிகமப டைட்டில் வின்னர் திவினேஷ் கொடுத்த மிகப்பெரிய பரிசு- என்ன தெரியுமா?
சரிகமப நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் திவினேஷின் தந்தைக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய பரிசு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் தொலைக்காட்சிகளில் பல்வேறு பாடல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. வருடம் வருடம் வித்தியாசமான கான்செப்டில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் பல வருடமாக விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
அதேபோல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பாடல் நிகழ்ச்சி தான் சரிகமப. இந்த நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல பாடகர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகளும் கிடைத்து இருக்கிறது. வழக்கம்போல் அர்ச்சனா தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது.
சரிகமப நிகழ்ச்சி:
இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்ற இரண்டு பிரிவுகளில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், கடந்த ஆண்டு தான் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்தது. சமீபத்தில் ஜூனியர் கான சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த வாரம் தான் இந்த நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது.
டைட்டில் வென்றவர்:
இதில் திவினேஷ் தான் டைட்டில் பட்டத்தை வென்றிருந்தார். இவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் இவருக்கு மெல்லிசை இளவரசன் என்ற பட்டமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் தான் திவினேஷிக்கு டைட்டில் பட்டதை வழங்கியிருந்தார். இவரை அடுத்து இரண்டாவது இடத்தை யோகஸ்ரீ மற்றும் மூன்றாவது இடத்தை ஹேமித்ரா பிடித்திருந்தார்கள்.
திவினேஷ் சொன்னது:
இப்படி இருக்கும் நிலையில் சரிகமப நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த திவினேஷின் தந்தைக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய பரிசு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சில வாரங்களுக்கு முன்பு நிகழ்ச்சியில் திவினேஷ் தன்னுடைய தந்தை குறித்து பேசி இருந்தார். அப்போது அவர், இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வருவதால் என்னுடைய அப்பாவினால் சரியாக வேலைக்கு போக முடியவில்லை. இதனால் அவரை வேலையை விட்டு நீக்கி விட்டார்கள். ஒரு டாட்டா ஏசி வண்டி இருந்தால் சொந்தமாக அவர் தொழில் செய்வார் என்று பேசி இருந்தார்.
திவினேஷ் தந்தைக்கு கிடைத்த பரிசு:
உடனே அங்கிருந்த நடுவர் சீனிவாஸ் அந்த வண்டியை வாங்க எவ்வளவு தொகை தேவைப்படும் என்று கேட்டிருந்தார். பின் அவரால் முடிந்தது ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்தார். அவர் மட்டுமில்லாமல் பல பலருமே தங்களால் முடிந்த தொகையை உதவி செய்தார்கள். தற்போது டைட்டில் வென்ற திவினேஷின் தந்தைக்கு அவர் ஆசைப்பட்ட மாதிரி புதிய டாட்டா ஏசி வண்டி வாங்கி கொடுத்துள்ளார்கள். அதனை மகிழ்ச்சியுடன் பாடகர் ஸ்ரீனிவாஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்து பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.