சரிகமபா Li'l Champs : பட்டத்தை ஜெயித்த இலங்கை சிறுமி - பரிசு தொகை இத்தனை லட்சமா.

By Arun · 18/12/2023

சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டதை சென்றிருக்கும் இலங்கை பெண் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் தொலைக்காட்சிகளில் பல்வேறு விதமான பாடல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பேமஸ் தான்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல பாடகர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகளும் கிடைத்து இருக்கிறது.
வழக்கம் போல் அர்ச்சனா தான் தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. மேலும், சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்தது.

சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 நிகழ்ச்சி:

தற்போது ஜூனியர் கான சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 நிகழ்ச்சி நடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 28 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் அசானி, கில்மிஷா என்ற பெண்கள் இலங்கையில் இருந்து வந்து கலந்து கொண்டிருக்கிறார்.

இறுதி சுற்று:

இந்த நிகழ்ச்சி பிரமாண்டமாக நேற்று முடிவடைந்து இருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக யுவன் சங்கர் ராஜா கலந்து கொண்டிருந்தார். மேலும், இந்த சீசனில் இலங்கை பெண் கில்மிஷா தான் டைட்டில் பட்டதை வென்றிருக்கிறார். இவருக்கு இதை யுவன் சங்கர் ராஜா தான் அறிவித்திருந்தார். இலங்கையில் இருந்து தமிழ்நாட்டில் வந்து வெற்றி பெற்றிருப்பது இதுவே முதல்முறை என்று மேடையில் இருந்த நடுவர்கள் கூறியிருந்தார்கள்.

டைட்டில் வென்றவர்:

கில்மிசாவுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. இவர் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்
இவரை அடுத்து இரண்டாவது இடத்தை ருத்ரேஷ் பிடித்திருக்கிறார். பின் மூன்றாம் இடத்தை சஞ்சனா பிடித்திருந்தார். இவருக்கு 2 லட்சம் ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டது. நான்காம் இடத்தை ரிக்ஷிதா பிடித்து இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full