காசு இல்லாததால் ஆடிஷனுக்கு வரமுடியாமல் போன சோகம், சொந்த காசு போட்ட அனுப்பி வைத்த ஊர்மக்கள். சரிகமபவில் திடீர் என்ட்ரி

By Arun · 5/8/2023

சரிகமப நிகழ்ச்சியில் தவறவிட்ட மெகா ஆடிசனை புதுப்போட்டியளராக என்ட்ரி கொடுத்து அசத்தி இருக்கும் அசானி குறித்து பலரும் அறிந்திடாத தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் தொலைக்காட்சிகளில் பல்வேறு விதமான பாடல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் தான். இந்த நிகழ்ச்சி இதுவரை 2 சீசன்களை கடந்து தற்போது 3வது சீசன் சென்று கொண்டு இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல் அர்ச்சனா தான் தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. மேலும், சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சியின் சீனியர் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்தது. தற்போது ஜூனியர் கான நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சி தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 28 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

சரிகமப நிகழ்ச்சி:

பின் இதுவரை 5 பேர் வெளியேறி, தற்போது 23 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு புதிதாக ஒருவர் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவரை பற்றி தான் இங்கு பார்க்கிறோம். அவர் பெயர் அசானி கனகராஜ். இவர் இலங்கை கண்டி என்ற பகுதியை சேர்ந்தவர். இவருடைய தந்தை தேயிலை தொழிலாளி. 150 வருடங்களுக்கு முன்னர் இராமேஸ்வரம் தான் இவர்களுடைய சொந்த ஊராக இருந்தது. அதற்குப்பின் இவர்கள் இலங்கை அகதிகளாக இடம் பெயர்ந்து விட்டார்கள்.

https://www.youtube.com/watch?v=VKYwbPvsXF0

அசானி குடும்பம்:

ஒரு தேயிலை தோட்டத்தில் பல வருடங்களாக இவர்களுடைய தலைமுறையே கொத்தடிமைகளாக வேலை செய்து வருகிறது. தற்போது அசானியின் அப்பா, அம்மா, அண்ணன் மூவருமே தேயிலைத் தோட்டத்தில் ஒரு நாளைக்கு 200 ரூபாய்க்கு வேலை செய்து வருகிறார்கள். அசானியின் மற்றொரு அண்ணன் மட்டும் டீ கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். மேலும், சினிமா, டிவி என்று எதுவும் பார்க்காமல் எப்எம் ரேடியோவில் வரும் பாட்டை கேட்டு அசானி பாடப் பழகியவர். அவரின் திறமையை அறிந்த அவருடைய குடும்பத்தினர் அசானி பாடிய வீடியோவை சரிகமப நிகழ்ச்சியின் ஆடிஷனுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

அசானி நிலைமை:

பின் அசானியால் மெகா ஆடிஷனில் கலந்து கொள்ள முடியவில்லை. இதற்கு காரணம் பணப்பற்றாக்குறை தான். இதை அறிந்த ஊர் மக்கள் , உறவினர்கள் என்று எல்லோரும் சேர்ந்து தங்களால் முடிந்த உதவிகளை செய்து இருந்தார்கள். அதோடு தங்களால் தான் வாழ்ந்த மண்ணை மிதிக்க இயலவில்லை நீ சென்று வெற்றி பெற்று வா என்று வாழ்த்தி அனுப்பி இருக்கிறார்கள். பின் மெகா ஆடிசனில் கலந்து கொள்ளாத இவரை நிகழ்ச்சியில் பாட நடுவர்கள் வாய்ப்பு அளித்து இருக்கிறார்கள். ஆனால், மெகா ஆடிஷனில் கலந்து கொள்ளவில்லை என்றால் போட்டியில் அனுமதிக்க வாய்ப்பில்லை.

நடுவர்கள் பாராட்டு:

அசானி கடல் கடந்து தமிழ்நாட்டை நம்பி வந்ததால் இவருக்கு ஒரு வாய்ப்பை நடுவர்கள் கொடுத்திருக்கிறார்கள். தன்னுடைய இன்னிசை குரலால் அரங்கை அசாணி அதிர வைத்திருக்கிறார். மேலும், இவருடைய திறமையை கண்டு நடுவர்களே வியந்து போய் விட்டார்கள். வெறும் எப்எம் ரேடியோவில் பாட்டை கேட்டு இப்படியெல்லாம் பாடுவதா? உனக்கு இது கடவுள் கொடுத்த வரம் . இன்னும் பயிற்சி இருந்தால் நீ மிகப் பெரிய அளவிற்கு வருவாய் என்றெல்லாம் நடுவர்கள் பாராட்டி இருக்கிறார்கள். இனி இந்த இலங்கை மெல்லிசை குரல் தொடர்ந்து மக்கள் மத்தியில் ஒலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full